வடமாகாணம் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளதால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்கிடமாகியுள்ளது என வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
துர்க்கா மணிமண்டபத்தில் மகளிர் தின நிகழ்வுகள் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றதுஇ இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அண்மைக்காலமாக தமிழ் பெண் யுவதிகளை இராணுவத்தில் இணையுமாறு அழைக்கின்றனர். அப்படியானால் ஏன் ஆண்களை அழைக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இராணுவத்தினர் இளம் பெண்களை வீடு வீடாக சென்று இராணுவத்தில் இணையுமாறு வலிந்து கேட்கின்றனர். இதேவேளை பயம்இ வறுமைஇ பாதுகாப்பற்ற தன்மை போன்ற பல காரணங்களினால் எம்பெண்கள் இராணுவத்தில் இணையக் கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆனால் மேலிடத்து ஆணைகளை நிறைவேற்றுவதே இராணுவ கீழ்மட்ட சிப்பாய்களின் கடமை என்பதை இராணுவத்தில் சேரும் பெண்கள் உணர்ந்துள்ளார்களா என்பது கேள்விக் குறியாகவே உள்ளது என அவர் தெரிவித்தார்.
தடுப்புக்காவலில் உள்ள தமிழ்க் கைதிகளுக்கு போதிய சட்ட உதவிகள் இல்லை என அறிவித்திருந்தார்கள். அவர்களுக்கு உதவி செய்யக் கூடிய சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து ஒரு சட்ட உதவி குழு ஒன்றை அமைக்க முன்வர வேண்டும். இதற்கான நிதியினை ஏதேனும் ஒரு அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம் என அவர் தெரிவித்தார்.
Categories Post
Home » Srilanka1
» வடக்கு முழுதும் இராணுவ மயம் பெண்களின் பாதுகாப்பு கேள்விக் குறி - முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்
வடக்கு முழுதும் இராணுவ மயம் பெண்களின் பாதுகாப்பு கேள்விக் குறி - முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன்
Posted by kesa
on Saturday, March 8, 2014,
Add Comment
Subscribe to:
Post Comments (Atom)

0 Response to "வடக்கு முழுதும் இராணுவ மயம் பெண்களின் பாதுகாப்பு கேள்விக் குறி - முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் "
Post a Comment