Latest Updates

Categories Post

யாழ்தேவி புகையிரதத்தில் மோதுண்டு தந்தை மூன்று வயது குழந்தையும் பலி

வவுனியா ஓமந்தைக்கும் புளியங்குளத்திற்கும் இடைப்பட்ட 168 வது மைல்கல்
பகுதியில் இன்று காலை அதிசொகுசு ரயிலுடன் பாதுகாப்பற்ற கடவையில் சென்ற மோட்டர் சைக்கிள் மோதியதில் தந்தையும் மகனும் பலியாகியுள்ளனர் .

புளியங்குளம் 160 வது மைல்கல் பிரதேசத்தில் பாதுகாப்பாற்ற புகையிரத கடவையை மோட்டார் சைக்கிள் மூலம் கடக்கும் போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது .

நேற்றைய தினம் பிற்பகல் 2.45 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து முதற் தடவையாக ஆரம்பித்த அதிசொகுசு ரயில் பளையை சென்றடைந்து இன்று காலை 6.50 மணிக்கு பளையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட போதே ஓமந்தைக்கும் புளியங்குளத்திற்கும் இடைப்பட்ட 168 ஆவது மைக்கல் அருகில் இவ் விபத்து காலை 7:40 மணியளவில் இடம்பெற்றுள்ளது .

வவுனியா சுந்தரபுரத்தை சேர்ந்த சிவசுப்பிரமணியம் சத்தியசுதன் வயது 32 மற்றும் அவருடைய மகனான சத்தியசுதன் டினோயன் ஆகியோர் மோதுண்டு பலியாகியுள்ளனர் .

உறவினர் வீட்டுக்கு சென்று திரும்பும் வழியில் சாரதி மனைவியை விளக்கு வைத்தகுளத்தில் ஏ 9 பதையில் இறக்கி விட்டு தானும் மகனும் மாற்று வழியினூடாக வவுனியாவை சென்றடையும் நோக்கோடு ரயில் கடவையை கடக்க முற்பட்ட வேளையிலேயே இச் சம்பவம் இடம்பெற்றதாக தெரியவருகின்றது .

சம்பவ இடத்தில் இருந்து இருவரது சடலமும் ரயிலில் வவுனியா புகையிரத நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு வவுனியா பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது .

இது தொடர்பான விசாரணைகளை புளியங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .




0 Response to "யாழ்தேவி புகையிரதத்தில் மோதுண்டு தந்தை மூன்று வயது குழந்தையும் பலி"

Post a Comment