யாழ்பாடி விடுதி முற்றுகை சம்பந்தமானது
யாழ்ப்பாணம் அம்மன் வீதியில் அமைந்துள்ள யாழ்பாடி விடுதியில் 02.03.2014 அன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனும் பொலிஸாரும் இணைந்து நடாத்திய முற்றுகை சம்பந்தமாக என்னை தொடர்புபடுத்திய செய்தியொன்று தங்களது இணையத்தளத்தில் 06.03.2014 இல் வெளியிடப்பட்டுள்ளது. அச்செய்தியில் வந்துள்ள விடயங்களுக்கும் எனக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்பதனை முதலில் தங்களுக்கு தெளிவுபடுத்த விரும்புகின்றேன்
மேலும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மாநகரசபை உறுப்பினராகிய நடராஜா இராஜதேவன் ஆகிய நான் குறித்த விடுதியின் முகாமையாளராகவே கடமையாற்றி வந்திருந்தேன் தங்களது இணையத்தளத்தில் குறிப்பிட்டது போன்று அதன் பங்குதாரர் அல்ல. மேலும் குறித்த முகாமையாளர் பதவியில் இருந்து எனது தனிப்பட்ட காரணங்கள் கருதி கடந்த 01.02.2014 முதல் பதவியை இராஜினாமா செய்து விலகியுள்ளேன்.
இது இவ்வாறு இருக்க உண்மைக்குப் புறம்பான விதத்தில் குறித்த விடயம் தொடர்பாக என்னுடன் தொடர்புகொண்டு எதுவித விளக்கங்களையும் கோராது என்னைப் பற்றியும் நான் சார்ந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல் பற்றியும் தாங்கள் வெளியிட்டிருக்கும் செய்தி மிகவும் மனவேதனையை தந்துள்ளது.
எனவே குறித்த செய்தியின் உண்மைத்தன்மையை மீள தங்களது இணைத்தளத்தில் பிரசுரிக்குமாறு கேட்டுக்கொள்வதுடன் மேலதிக விபரங்களுக்கு எனது கைத்தொலைபேசி இலகத்துடன் தொடர்புகொள்ளவும்
நன்றி
உண்மையுள்ள
ந.இராஜதேவன்
யாழப்பாண மாநகரசபை உறுப்பினர்
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு

0 Response to "யாழ்பாடி மஸாச் நிலையதிற்கும் தனக்கும் தொடர்பு இல்லையாம். ரி.என்.ஏ ராஐதேவன் மறுப்பு!"
Post a Comment