குறித்த மாணவிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பிறந்தநாள் விழாவொன்றில் கலந்துகொண்டுவிட்டு வீடு திரும்புவதற்காக பஸ் நிலையத்துக்கு வந்ததாகவும் பஸ்ஸொன்று வரும் வரை காத்திருப்பதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இவ்விருவரும் அணிந்திருந்த ஆடைகள் பொலிஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்தே குறித்த இரு மாணவிகளையும் கைது செய்ததாக குறிப்பிட்ட மஹரகம பொலிஸார் கைது செய்யப்பட்ட மாணவிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருவரில் ஒருவர் இராணுவத்தில் உயர் பதவிநிலை வகிக்கும் அதிகாரி ஒருவரின் மகள் என தெரியவந்துள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.
மேலும் இவ்விரு மாணவிகளது பெற்றோரையும் வரவழைத்து மாணவிகளை அவர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

0 Response to "நள்ளிரவில் பஸ் நிலையத்தில் காத்திருந்த கொழும்பின் பிரபல பாடசாலை மாணவிகள் கைது!"
Post a Comment