28 வருடங்களுக்கு பின்னர் யாழ்.தேவி இன்று (04) பளை வரை சென்றுள்ளது.
புனரமைக்கப்பட்ட கிளிநொச்சி பளை புகையிரத நிலையம் இன்று காலை போக்குவரத்து துறை அமைச்சர் குமார வெல்கம, பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பிரதி போக்குவரத்து அமைச்சர் ரோகண திஸநாயக்க, இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா, ஈ.பி.டி.பியின் பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார், யாழ்.இந்திய துணை தூதுவர் மகாலிங்கம் மாவட்ட அரச அதிபர் திருமதி றூபவதி கேதீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டு திறந்து வைத்துள்ளனர்.
இன்று முதல் கொழும்பு பளை வரையான சேவைகள் நடைபெறுவதோடு வரும் வெள்ளிக்கிழமை முதல் குளிரூட்டப்பட்ட சொகுசு புகையிரத சேவையும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த சொகுசு புகையிரத சேவையானது எதிர்வரும் தினமும் கொழும்;பிலிருந்து பளை வரை தனது சேவையினை மேற்கொள்ளவுள்ளது.
இதேவேளை யாழ்.தேவி புகையிரதம் எதிர்வரும்; யூன் மாதமே யாழ்ப்பாணத்திற்கு செல்லும் எனவும் அதன் பின்னர் செப்ரெம்பர் 14 திகதிக்கு முன்னர் காங்கேசன்துறை அவரை செல்லும் போக்குவரத்து துறை அமைச்சர் குமார வெல்கம அவர்கள் தெரிவித்துள்ளார்
இதேவேளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் ஆகியோரது வேண்டுகோளுக்கமைவாக புகையிரத பாதைகளை குறுக்கறுத்துச் செல்லும் பாதைகளுக்கு பாதுகாப்பு கடவை அல்லது பணியாளர்களை நியமித்து பொதுமக்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்கு உடனடியாகவே நடவடிக்கை எடுக்குமாறு புகையிரத திணைக்கள பொது முகாமையாளருக்கு போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம பணிப்புரை வழங்கியுள்ளார்.
இந்த புகையிரத சேவையானது கோட்டையிலிருந்து தினமும் பிற்பகல் 2.25 மணிக்கு புறப்பட்டு இரவு 8.28 மணிக்கு பளை சென்றடையும்,மறுநாள் காலை பளையிலிருந்து புறப்படும் புகையிரதம் மதியம் கோட்டையை அடையும் எனவும் புகையிரத திணைக்களத்தினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஈ.பி.டி.பியின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன், மற்றும் பிரதேச செயலாளர்கள் அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
Categories Post
Subscribe to:
Post Comments (Atom)


0 Response to "28 வருடங்களுக்கு பின்னர் யாழ்.தேவி பளைக்கு"
Post a Comment