Latest Updates

Categories Post

காணாமல் போன உறவுகளை தேடி கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளில் தமக்கு நம்பிக்கையில்லை[படங்கள் இணைப்பு]


காணாமல் போன உறவுகளை தேடிக் கண்டறிவதற்கான விசாரணைக்குழுவின் விசாரணைகளில்
நம்பிக்கையோ சரியான ஒரு முடிவு எமக்கு கிடைக்கும் என்றோ சாட்சியமளிக்கும் எங்களுக்கு பாதுகாப்போ உறுதிப்படுத்த முடியாதென்பதை நாங்கள் உணந்துள்ள நிலையில் உயர் நீதிமன்றத்தில் எமது உறவுகளை தேடிக்கண்டறிவதற்காக ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்ய உள்ளதாக சாவகச்சேரியில் நடைபெற்ற விசாராணைகளுக்கு சமூகமளிப்பதற்காக கலந்து கொண்டவர்கள் தெரிவித்துள்ளனர் .

கற்றுக்கொண்டபாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய காணாமல் போன உறவுகளை தேடி கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளில் தமக்கு நம்பிக்கையில்லை எனவும் சாட்சியமளிக்கின்ற காணாமல்போனோரின் உறவுகள் தமது பாதுகாப்புகள் உறுதிப்படுத்தப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆணைக்குழுவிடம் கேட்டுக்கொண்டனர் .

தங்களது விசாரணைகளில் சாட்சியமளிக்கின்ற போது தமது உறவுகளை விரைவாக தேடிக்கண்டறிந்து உறவினர்களுடன் இணைக்க உதவவேண்டும் எனவும் சாடசியாளர்களுடைய பாதுகாப்பு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தாங்கள் இவ் ஆணைக்குழுவின் விசாரணைகளில் சமூகமளிப்பதிலும் அக்கறை கொண்டுள்ள அதே நேரம் உயர் நீதிமன்றிலும் ஆட்கொணர்வு மனுவொன்றை தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தனர் .

இதற்கு பதிலளித்த விசாரணைக்குழுவினர் தமக்கு விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டவர்களுடைய முறைப்பாடுகளை பதிவு செய்வதற்கான அதிகாரம் மட்டுமே தற்போது அளிக்கப்பட்டுள்ளதாகவும் சாட்சியாளர்களது பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பில் கூற்றுகளை மட்டுமே பதிவு செய்ய முடியும் பாதுகாப்புகளை உறுதிப்படுத்துவது என்பது எமது அதிகாரத்துக்கு அப்பாற்பட்டது நீங்கள் விரும்பினால் உயர்நீதிமன்றில் ஆட்கொணர்வு மனுக்களை தாக்கல் செய்ய முடியும் என தெரிவித்தனர் .

அதே வேளை சாட்சியமளிப்பதற்கு அழைக்கப்பட்ட ஒரு சிலர் சாட்சியமளிக்க மறுத்திருந்தமையையும் காணக்கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது .
 
யாழ் நிருபர் .

0 Response to "காணாமல் போன உறவுகளை தேடி கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகளில் தமக்கு நம்பிக்கையில்லை[படங்கள் இணைப்பு]"

Post a Comment