 யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றம் தொடர்பில் நிச்சயமாக சுயாதீன விசாரணையொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார் .
யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றம் தொடர்பில் நிச்சயமாக சுயாதீன விசாரணையொன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார் .எமது இராணுவத்தினர் போர் குற்றத்தில் ஈடுபடவில்லை . அவர்கள் நாட்டை மீட்பதற்கு தம்மை அர்ப்பணித்து சேவையாற்றியவர்கள் . அவ்வாறு இருக்கும் போது இந்த அரசாங்கம் போர் குற்ற விசாரணை தொடர்பில் அஞ்சுவதேன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார் .
போர்குற்ற விசாரணை தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது ,
போர்குற்ற விசாரணை என்றால் என்னவென்பதை அரசாங்கம் நன்றாக புரிந்துகொள்ள வேண்டும் . போர் குற்றம் புரியவில்லையென்றால் நாம் எவ்வித அச்சமுமின்றி விசாரணைக்குச் செல்லலாம் . அவ்வாறு செல்லாதபட்சத்தில் எமது இராணுவத்தினர் மீது சர்வதேச மட்டத்தில் தேவையற்ற சந்தேகங்கள் ஏற்படுவதுடன் , சர்வதேச நாடுகள் எமது நாட்டின் மீது சுமத்துகின்ற குற்றச்சாட்டுக்கள் உண்மையானவை என்று நாமே ஏற்றுக் கொள்வதாக அமைந்துவிடும் .
போர்க்குற்றம் தொடர்பிலான விசாரணை தேவை என்ற கருத்து மேலோங்குவதற்கு காரணம் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தான் இறுதிக்கட்ட யுத்தம் நடைபெற்ற போது மீட்கப்பட்ட பெருந் தொகையான தங்க நகைகள் மற்றும் பணம் போன்றவற்றிற்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் எதுவித கருத்துக்களையும் அரசாங்கம் வெளியிடாதுள்ளது .
சார்ல்ஸ் என்டனி கொல்லப்பட்ட போது நான்கு கோடி டொலர்கள் இருந்ததாக சொல்லப்பட்டது . அவரிடமே அந்த அளவு பணமிருந்திருந்தால் புலிகள் இயக்கத் தலைவரிடம் எந்தளவு பணம் இருந்திருக்கும் ? எனவே அவற்றுக்கெல்லாம் என்ன நடந்தது என்ற கேள்வி எல்லோரிடத்திலும் நிலவுகிறது .
மதஸ்தலங்கள் மீதும் மக்கள் மீதும் குறிப்பாக இராணுவத்தினர் மீதும் தாக்குதல் நடத்திய புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த நபரை அரசாங்கம் கிழக்கின் முதலமைச்சராக்கியது . தலதாமாளிகை மீதும் மேலும் பல பௌத்த தலங்களின் மீதும் தாக்குதல் நடத்தியதுடன் ஆயிரக்கணக்கான உயிர்களை பலியெடுத்த நபரை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உப தலைவராகவும் பிரதியமைச்சராகவும் வைத்து பாதுகாத்து வருகிறது . இவையெல்லாம் தான் போர்க் குற்றங்கள் .
புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளரும் இலங்கை இராணுவத்திற்கெதிராகவும் பொது மக்களுக்கெதிராகவும் புலிகள் தாக்குதல் நடத்துவதற்கு ஆயுதங்களை பெற்றுக்கொடுத்த புலிகளில் முக்கிய நபருக்குப் பாதுகாப்பளித்து , சுகபோக வாழ்க்கையினை வழங்கி வருகிறது .
ஆனால் " புலிகளுக்கு உதவினார்கள் " என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு குற்றங்கள் நிரூபிக்கப்படாத அரசியல் கைதிகள் பலரை நீண்டகாலமாக தடுத்து வைத்துள்ளது . இவ்வாறான சம்பவங்களை எல்லாம் வைத்துக் கொண்டு தான் போர்க்குற்ற விசாரணை கோரப்படுகிறது .
புலிகளின் சர்வதேச ஆயுத கொள்வனவாளர் கைது செய்யப்பட்ட போது அவரிடம் 15 கப்பல்கள் இருப்பதாகவும் பல வர்த்தக கட்டடங்கள் உள்ளிட்ட மேலும் பல வர்த்தகங்கள் இருப்பதாகவும் அரசாங்கத்தின் அமைச்சர்கள் பலரே கூறினார்கள் . அப்படியானால் அவற்றிற்கெல்லாம் என்ன நடந்தது ? அதுவொரு போர் குற்றமல்லவா ? உயிர் தியாகம் செய்து இராணுவத்தினர் பெற்றுக் கொடுத்த வெற்றியானது அரசாங்கத்தின் இவ்வாறான நடவடிக்கையினால் தான் கொச்சைப்படுத்தப்படுகிறது .
ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களையும் இராணுவத்தினரையும் கொலை செய்வதற்கு ஆயுதம் வழங்கிய நபர் இன்று யாருடன் இருக்கிறார் ? அது மாத்திரமல்லாமல் , ஸ்ரீ மாபோதி தாக்குதல் , அரந்தலாவையில் 26 பிக்குகள் கொல்லப்பட்டமை , காத்தான்குடி பள்ளிவாசலில் 155 பேர் கொலை செய்யப ்பட்டமை இவையனைத்தும் புலிகள் அன்று செய்த போர் குற்றங்கள் . அவற்றுடன் தொடர்புடைய இரு முக்கியஸ்தர்கள் இன்று அரசாங்கத்துடன் இருக்கிறார்கள் .
இவர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தால் நியாயம் பெற்றுக் கொடுக்க முடியாமல் போயுள்ளது . இவையெல்லாம் போர்க் குற்றமே . எனவே தான் அரசாங்கம் போர்க் குற்ற விசாரணை என்றவுடன் அச்ச மடைகிறது என்றார் .
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
0 Response to "இராணுவத்தினர் போர் குற்றத்தில் ஈடுபடவில்லை. அவர்கள் நாட்டை மீட்பதற்கு அர்ப்பணித்து சேவையாற்றியவர்கள். ரஞ்சன் ராமநாயக்க"
Post a Comment