Latest Updates

Categories Post

நாளை கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய வருடாந்த கொடியேற்ற நிகழ்வு.

வரலாற்றுப் புகழ் மிக்க கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய வருடாந்த கொடியேற்ற நிகழ்வு
நாளை வெள்ளிக் கிழமை பகல் 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது .

தொடர்ந்து பதினைந்து நாட்கள் நடைபெறவுள்ள உற்சவத்தில் தினமும் பகல் 10.00 மணிக்கு கொடித்தம்ப பூசையும் 11.00 மணிக்கு வசந்த மண்டபப் பூசையும் இடம் பெறுவதுடன் மாலைப் பூசைகள் தினமும் 5.00 மணிக்கு கொடித்தம்ப பூசையும் 5.30 மணிக்கு வசந்த மண்டபப் பூசையும் இடம் பெறவுள்ளன .

27 ம் திகதி தேர் திருவிழாவும் சிவராத்திரி பூசையும் இடம் பெறுவதுடன் வெள்ளிக்கிழமை 28 ம் திகதி கீரிமலை கண்டாங்கி தீர்த்தத்தில் தீர்த்தோற்சவமும் நடைபெறும் .

0 Response to "நாளை கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய வருடாந்த கொடியேற்ற நிகழ்வு."

Post a Comment