Latest Updates

Categories Post

மாணவியை நிர்வாணபடமெடுத்து ரசித்த காதலனுக்கு விளக்கமறியல்

மாணவியொருவரின் நிர்வாணப் புகைப்படம் எடுத்ததான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட காதலன் என்று சொல்லப்படும் இளைஞரை எதிர்வரும் ஐந்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குருணாகல் நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.

குருணாகல் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவியொருவரை நிர்வாணமாக்கி புகைப்படம் எடுத்தார் என்ற குற்றச்சாட்டில் மேற்படி மாணவியின் பெற்றோர் பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்தே மேற்படி இளைஞர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், குறித்த இளைஞன் இன்று(20) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

இந்நிலையில், குறித்த முறைப்பாட்டை மீளப்பெறுமாறு சந்தேகநபரான இளைஞனின் பெற்றோர் மற்றும் நண்பர்கள், மேற்படி மாணவியின் பெற்றோரை அச்சுறுத்தியதாகவும் பொலிஸார் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

0 Response to "மாணவியை நிர்வாணபடமெடுத்து ரசித்த காதலனுக்கு விளக்கமறியல்"

Post a Comment