 உடலில் அளவுக்கதிகமான முடி வளரும் விநோத பாதிப்புக்குள்ளான பிரித்தானியாவைச் சேர்ந்த 23 வயது யுவதியொருவர் தனக்கு முகத்தில் வளர்ந்துள்ள தாடியால் தான் தன்னை மேலும் பெண்மைத்தன்மை உடையவராக தெரிவித்துள்ளார்.
உடலில் அளவுக்கதிகமான முடி வளரும் விநோத பாதிப்புக்குள்ளான பிரித்தானியாவைச் சேர்ந்த 23 வயது யுவதியொருவர் தனக்கு முகத்தில் வளர்ந்துள்ள தாடியால் தான் தன்னை மேலும் பெண்மைத்தன்மை உடையவராக தெரிவித்துள்ளார்.பேர்க்ஷியரில் ஸ்லோக் எனும் இடத்தைச் சேர்ந்த ஹர்னாம்கோர் என்ற மேற்படி பெண்ணுக்கு கருப்பைக் கோளாறு ஒன்றின் காரணமாக அவரது 11 வயது முதற்கொண்டு முகத்தில் தாடி வளர ஆரம்பித்தது.
தொடர்ந்து அவரது மார்பு மற்றும் கரங்களிலும் முடி வளர ஆரம்பித்தது.
இதனால் அவரால் வீதியிலும் பாடசாலையிலும் பெரும் அசௌகரியத்தையும் அவதூறையும் எதிர்கொள்ள நேர்ந்ததுடன் அவருக்கு இணையத்தளம் மூலம் படுகொலை அச்சுறுத்தல்களும் விடுக்கப்பட்டன.
இதனால் தனது மிகையான முடிகளை பல வருட காலமாக வெட்டி அகற்றி வந்த ஹர்னம் தற்போது அவ்வாறு முடிகளை வெட்டி அகற்றுவதை நிறுத்த முடிவெடுத்துள்ளார்.
சீக்கிய மதத்தை தழுவிக் கொண்டதையடுத்தே அவர் தனது முடியை வெட்டும் செயற்கிரமத்தை நிறுத்தியுள்ளார்.
சீக்கிய மதத்தில் முடி வெட்டுவது தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் கர்னம் விபரிக்கையில்,
நான் இனி மேலும் எனது முகத்தில் வளர்ந்துள்ள தாடியை அகற்றப் போவதில்லை. ஏனெனில் இந்த வழியிலேயே கடவுள் என்னைப் படைத்துள்ளார். அதனால் நான் இவ்வாறு இருப்பதையிட்டு மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறினார்.
தான் சிறுமியாக இருக்கும் போது தாடியை வாரத்துக்கு இரு தடவை அகற்றி வந்ததாகவும் பின்னர் அந்த தாடி அடர்த்தியாக வளர ஆரம்பித்ததையடுத்து வெளியில் நடமாட அஞ்சி வீட்டினுள்ளேயே பொழுதைக் கழித்து வந்ததாகவும் தெரிவித்த ஹர்னாம், சில சமயங்களில் தனக்கு தானே தீங்கு விளைவிக்கவும் தற்கொலைக்கும் முயற்சித்ததாகவும் கூறினார்.
 
.jpg) 
 
 
 
 
 
 
 
 
 
0 Response to "என் முகத்திலுள்ள தாடியால் என்னை மென்மேலும் பெண்ணாக உணர்கிறேன்”"
Post a Comment