Latest Updates

Categories Post

புலிகள் இயக்கத்தை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்தது தவறு!– போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் முன்னாள் தலைவர்

விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்தது மிகப்பெரிய தவறு என்று இலங்கையில் போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவராகப் பணியாற்றிய மேஜர் ஜெனரல் உல்ப் ஹென்றிக்சன் தெரிவித்துள்ளார்.

2006ம் ஆண்டு காலப் பகுதியில், போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழுவின் தலைவராகப் பணியாற்றிய மேஜர் ஜெனரல் உல்ப் ஹென்றிக்சன், கடந்த சனிக்கிழமை, சுவீடனில் வைத்து, தமிழ்நெற் இணையத்தளத்துக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்வதற்கு அமெரிக்கா மற்றும் சிறிலங்காவின் அழுத்தங்கள் இருந்தன.

அது ஒரு மிகப் பெரிய தவறு என்கிறேன். ஏனென்றால், அமைதித் தீர்வு மற்றும் பேச்சக்களுக்கான வாய்ப்புகளை அது தடுத்து நிறுத்தி விட்டது.

தீர்வு காணும் விடயத்தில், பொஸ்னியாவுடன் ஒப்பிடும் போது, மேற்குலகம் குறைந்தளவு அக்கறையையே காட்டுகிறது.

இந்தியாவினது அக்கறை முக்கியமானது. ஆனால், இந்தியாவும் இதில் ஈடுபட ஆர்வம் காட்டவில்லை.

இலங்கை அரசாங்கத்துக்கு ஒரு தீர்வு தேவைப்படவில்லை.

இலங்கையில் நான் விரும்புபவர்களில் ஒருவர், கோத்தபாய ராஜபக்ச.

அவர் நாட்டின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருக்கும் வரை, உங்களுக்கு ஒரு தீர்வும் கிடைக்காது.

அந்த மனிதருக்கு எந்தவொரு அமைதி தீர்வும் தேவையில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Response to "புலிகள் இயக்கத்தை ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்தது தவறு!– போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுவின் முன்னாள் தலைவர்"

Post a Comment