Latest Updates

Categories Post

யாழில் தமிழ் மக்களின் வீடுகளை இடித்துக் கொண்டிருந்த போது மதில் இடிபாடுகளுக்குள் சிக்கி இராணுவ சிப்பாய் பலி.

யாழ் . பலாலி பாதுகாப்பு வலயத்திற்குள் தமிழ் மக்களின் வீடுகளை இடித்து அழித்துக்
கொண்டிருந்த பொழுது வீடு ஒன்றினுடைய மதில் இடிபாடுகளுக்குள் சிக்கி நேற்று செவ்வாய்க்கிழமை இராணுவத்தினர் ஒருவர் யாழ் . போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன .

கண்டி , வலப்பனை பகுதியைச் சேர்ந்த டபிள்யூ . ஜே . எம் . எஸ் . பண்டார ( வயது 23 ) என்பவரே மரணமடைந்துள்ளார் .

இந்த நிலையில் , இவரது சடலம் தற்போது யாழ் . போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது .

வலி . வடக்கில் தமிழ் மக்களின் வீடுகள் இருந்த இடம்தெரியாமல் இடித்தழிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .

0 Response to "யாழில் தமிழ் மக்களின் வீடுகளை இடித்துக் கொண்டிருந்த போது மதில் இடிபாடுகளுக்குள் சிக்கி இராணுவ சிப்பாய் பலி."

Post a Comment