Latest Updates

Categories Post

கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்த உடன்நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக ஆர்வலர் வேண்டுகோள்.

யாழ் . போதனா வைத்தியசாலை உட்பட யாழ் . மாவட்டத்தின் ஏனைய வைத்தியசாலைகளில்
கட்டாக்காலி நாய்கடிகளுக்கு இலக்காகி பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர் . இந்நிலைக்கு காரணம் கட்டாக்காலி நாய்களின் பெருக்கம் . இதற்கு உள்ளூராட்சி சபை , உள்ளூராட்சி அமைச்சு , சுகாதார அமைச்சு , அரச அதிபர் மற்றும் இதனோடு சம்பந்தப்பட்ட அனைவரும் ஒன்று திரண்டு முடிவுகாண வேண்டும் என மானிப்பாய் இந்துக் கல்லூரியின் பழைய மாணவனும் அமெரிக்கா கல்போர்னியா வாழ் சமூக ஆர்வலருமான ப . செகரராஜசேகரன் தெரிவித்தார் .

கட்டாக்காலி மற்றும் விசர் நாய்க்கடிக்கு இலக்காகி பாதிக்கப்படுவோர் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டு கருத்துக் கூறுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார் .

அவர் மேலும் கூறுகையில் , கடந்த காலங்க ளில் வீதிக்கு வீதி கட்டாக்காலியாக திரி யும் அனைத்து நாய்களும் உள்ளூராட்சி சபைகளால் பிடித்து அழிக்கப்பட்டன . தற்போதைய அரசின் சட்டங்களால் கட்டாக்காலி நாய்கள் பல்கி பெருகி வீதிகளில் உலாவருகின்றன .

உள்ளூர் நாய்களை வளர்ப்பு பிராணியாக வளர்ப்பவர்கள் உரிய காலத்தில் ஊசி போடுவதில்லை , சுத்தப்படுத்துவதில்லை , உணவு சரியாக வழகுவதில்லை . இதனால் வளர்ப்பு நாய்கள் நோய்த்தொற்று ஏற்பட்டு குட்டை சொறியுடன் வளரும்போது வளர்ப்பவர்கள் இடைநடுவில் அவற்றை கைவிடுகின்றனர் . இதனால் அனைத்து நாய்களும் வீதிகளுக்கு வந்துவிடுகின்றன . இதனால் வீதியில் செல்லும் சிறுவர்கள் , வயோதிபர்கள் , வாகன சாரதிகள் எனப் பலரும் இன்னல்களுக்கு உள்ளாகிவருகின்றனர் .

விசர் நாய் கடிக்குள்ளாகி உரிய சிகிச்சை பெறாது சிலர் இறந்தும் உள்ளனர் .

இன்று வடக்கின் 17 உள்ளூராட்சி சபைகளுக்கு கீழும் இந்த பிரச்சினையை அவதானித்து ஆய்வு செய்தேன் .

கடந்த காலங்களில் வலி . தென்மேற்கு பிரதேச சபை வளர்ப்பு நாய்களுக்கான குடும்ப அட்டைத் திட்டத்தை முன்னிறுத்திய போது அரசாங்க அதிபர் க . கணேஷ் அதனை வரவேற்று செயற்படுத்தினார் . இன்று அந்த திட்டம் எந்தளவிற்கு செல்கின்றது என்பது தெரியவில்லை . எனினும் ஒரு சில சபைகள் வருமானம் திரட்டுவதற்காக பயன்படுத்துகின்றன .

எது எவ்வாறாகினும் 2014 இல் கட்டாக் காலி நாய்க்கு அரசு அரசசார்பற்ற பிரிவினர் மற்றும் பொதுமக்கள் இணைந்து தீர்வு காணப்படாது விடின் நிச்சயமாக நாய்களினால் எதிர்காலத்தில் வடக்கு மாகாண மக்கள் பெரும் இன்னல்களை அனுபவிப்பார்கள் என்றார் .

0 Response to "கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்த உடன்நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக ஆர்வலர் வேண்டுகோள்."

Post a Comment