Latest Updates

Categories Post

சிவில் பாதுகாப்புக் குழுக்களின் கட்டமைப்பில் பொலிஸ் தினைக்களத்தினால் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன

கிராம அலுவலர்கள் பிரிவுகளில் அமைக்கப்பட்ட சிவில் பாதுகாப்புக் குழுக்களின்
கட்டமைப்பில் பொலிஸ் தினைக்களத்தினால் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன . பொலிஸ் தினைக்களத்தினால் உருவாக்கப்பட்ட சிவில் பாதுகாப்புகுழுக்களின் கடமைகளை சீர் செய்யவும் வினைத்திறன் உள்ளதாகவும் மாற்றும் வகையில் இந்த நடவடிக்கைகளை பொலிஸ் தினைக்களம் மேற்க் கொள்டுள்ளது .
இது சம்பந்தமாக சுற்று நிருபத்தை பொலிஸ் மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பியுள்ளதுடன் பிரதேச செயலகங்களுக்கும் கடந்த வாரம் அனுப்பி வைத்துள்ளார் .
இது வரை காலமும் கிராம அலுவலர்கள் பிரிவுகளில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியினால் நியமனம் செய்யப்படும் பொலிஸ் அலுவலர் தலைவராகவும் கிராம அலுவலர் செயலாளராகவும் செயலபடும் நிலமை காணப்பட்டதுடன் மட்டுப்படுத்திய கிராம மட்ட அமைப்புக்களின் உறுப்பினர்களையும் அங்கத்தவர்களாக கொண்டது .
புதிய அமைப்பின் கீழ் கிராம அலுவலர்கள் தலைவராகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் நியமனம் செய்யப்படும் பொலிஸ் அலுவலர் செயலாளராக செயல்படவுள்ளார் .
 இத்துடன் பிரதேச செயலகங்களின் வெளிக்கள அலுவலர்கள் மற்றும் பாடசாலை அதிபர்கள் கிராம மட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதி நிதிகள் இளைஞர் பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கியதாகவும் இந்த சிவில் பாதுகாப்பக்குழு இயங்குவதுடன் பிரச்சனைகளை இனம் கண்டு தீர்வுகளையும் எட்டுவதாகவும் செயல்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது .

0 Response to "சிவில் பாதுகாப்புக் குழுக்களின் கட்டமைப்பில் பொலிஸ் தினைக்களத்தினால் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன "

Post a Comment