வன்னிப் பகுதியில் தற்போது சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்படும் சம்பவங்கள்
அதிகரித்துக் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது .
கிளிநொச்சி , முல்லைத்தீவு மாவட்டங்களிலேயே இச் சிறுவர்கள் மீதான துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகளவாக இடம்பெற்று வருகின்றன . மீள்குடியேற்றத்தின் பின்னரான கடந்த நான்கு ஆண்டுகளில் கிளிநொச்சி , முல்லைத்தீவு மாவட்டங்களில் அதிகளவான சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் .
தாய் , தந்தையரை இழந்து உறவினர்களின் பராமரிப்பில் இருக்கும் சிறுவர்களே அதிகளவில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர் . கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த மாதத்தில் தாய் , தந்தையர் இன்றி உறவினரின் பராமரிப்பில் இருந்துவந்த 3 சிறுமிகள் தீயினால் சுடப்பட்டு துன்புறுத்தப்பட்டிருக்கினறனர். இதேவேளை 15 வயதுச் சிறுமி ஒருவர் கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதியில் 3 பிள்ளைகளின் தந்தை ஒருவரால் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது . இதைவிட கடந்த ஆண்டிலே இவ்விரு மாவட்டங்களிலும் கூடுதலான துஷ்பிரயோகச்சம்பவம் இடம்பெற்றிருப்பதாகப் புள்ளி விபரங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
Categories Post
சிறுவர் துஷ்பிரயோகங்கள் வன்னிப் பகுதியில் அதிகரிப்பு.
Posted by kesa
on Thursday, February 20, 2014,
Add Comment
Subscribe to:
Post Comments (Atom)

0 Response to "சிறுவர் துஷ்பிரயோகங்கள் வன்னிப் பகுதியில் அதிகரிப்பு."
Post a Comment