Latest Updates

Categories Post

பாலு மகேந்திராவுக்கு அஞ்சலி செலுத்த வந்த மவுனிகாவால் பரபரப்பு!


பாலுமகேந்திராவின், ´´வண்ண வண்ண பூக்கள்´´ படத்தால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை மவுனிகா. அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

அந்தப்படத்தில் இருந்தே பாலுமகேந்திராவுக்கு பிடித்தமான நடிகையாக மாறினார் மவுனிகா. அதன்பிறகு பாலுமகேந்திரா கதை நேரம் என்று டி.வி. சீரியல் எடுத்தபோது மவுனிகாவே அதில் பிரதான நாயகியாக நடித்தார். மேலும் மவுனிகாவின் குடும்ப நண்பராகவும் பாலுமகேந்திரா இருந்து வந்தார் என்றும், இதனால் பாலுமகேந்திராவின் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நடிகை மவுனிகா, பாலுமகேந்திராவுக்கு அஞ்சலி செலுத்த வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தியை கேட்ட இயக்குநர் பாலா, அங்கு ஒரு பெரும் பிரச்சினையே செய்துவிட்டார்.

மவுனிகாவை உள்ளே விடக்கூடாது, அதை நான் அனுமதிக்க மாட்டேன் என்று சத்தம் போட்டு ரகளை பண்ணிவிட்டார். இதனால் பாலுமகேந்திராவின் இல்லத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பாலுமகேந்திராவின் சீடர்களில் பாலா மிகவும் முக்கியமானவர். கிட்டத்தட்ட அவரின் வளர்ப்பு மகன் என்று கூட சொல்லலாம், தன் சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் அவருடன் தான் பகிர்ந்து கொள்வார். இந்தநிலையில், மவுனிகா வரக்கூடாது என்று பாலா எதற்கு தடுத்தார் என தெரியவில்லை.

0 Response to "பாலு மகேந்திராவுக்கு அஞ்சலி செலுத்த வந்த மவுனிகாவால் பரபரப்பு!"

Post a Comment