பாடசாலை மாணவியொருவர் வெள்ளை வானில் கடத்தப்பட்டுள்ளார். மதவாச்சி, மைத்திரிபால சேனாநாயக்க மஹா வித்தியாலய மாணவி ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார்.
பாடசாலையில் தரம் 9ல் கல்வி பயிலும் 14 வயது மாணவியே கடத்தப்பட்டுள்ளார்.
பாடசாலை முடிந்து முச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது வெள்ளை வானில் சென்றவர்கள், முச்சக்கர வண்டியை மறித்து மாணவியை கடத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் மதவச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
வெள்ளை வான்களுக்கு அஞ்சப் போவதில்லை!– சுசில் கிந்தல்பிட்டிய
வெள்ளை வான்களுக்கு அஞ்சப் போவதில்லை என ஜனநாயகக் கட்சியின் மேல் மாகாணசபை வேட்பாளர் சுசில் கிந்தல்பிட்டிய தெரிவித்துள்ளார்.
வனாத்தமுல்ல சுனில் அண்ணாவை பார்க்கச் சென்றோம். சுனில் அண்ணாவை ஏன் கடத்தினார்கள். அவர் எதற்காக போராடினார்.
அந்தப் பிரதேச மக்கள் பிரதேசத்திலிருந்து வெளியேற்றப்படக் கூடாது எனக் கோரினார்.
இன்றிரவு என்னை கடத்த வெள்ளை வான் அனுப்பி வைக்கப்படலாம். நான் வெள்ளை வான்களுக்கு அஞ்சவில்லை.
சுட்டுக் கொலை செய்யுங்கள். என்னைக் கொல்வதனால் சுதந்திரம் கிடைத்தால் பரவாயில்லை. எனினும், என்னைக் கொலை செய்வதனால் சுதந்திரம் கிட்டாது.
நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
வனாத்தமுல்லவிற்கு சென்ற கார்ட்போர்ட் வீர்ருக்கு, பொடி பில்டருக்கு என்ன நேர்ந்தது என்று என கிந்தல்பிட்டிய தெரிவித்துள்ளார்.
மத்திய கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Categories Post
Home » Uncategories » பாடசாலை மாணவி வெள்ளை வானில் கடத்தல் - வெள்ளை வான்களுக்கு அஞ்சப் போவதில்லை!- சுசில்
பாடசாலை மாணவி வெள்ளை வானில் கடத்தல் - வெள்ளை வான்களுக்கு அஞ்சப் போவதில்லை!- சுசில்
Posted by kesa
on Saturday, February 22, 2014,
Add Comment
Subscribe to:
Post Comments (Atom)

0 Response to "பாடசாலை மாணவி வெள்ளை வானில் கடத்தல் - வெள்ளை வான்களுக்கு அஞ்சப் போவதில்லை!- சுசில்"
Post a Comment