இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 220 கிலோ கஞ்சா பொதிகள் தூத்துக்குடி கடற்பரப்பில் மிதந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.தூத்துக்குடி – தாளமுத்துநகர் காவற்துறையினருக்கு வழங்கப்பட்ட தகவல் ஒன்றின் அடிப்படையில் இவை மீட்கப்பட்டிருக்கின்றன.
ஐந்து பொதிகளாக காணப்பட்ட இவற்றை கடத்திச் சென்றவர்கள், கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள கடற்படை அதிகாரிகளை கண்டதும் கடலில் வீசி இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இது தொடர்பில் தாளமுத்துநகர் காவற்துறையினர் விசாரணை நடத்துகின்றனர்.
தேர்தல் சட்டங்களை மீறி 33 பேர் கைது
தேர்தல் சட்டங்களை மீறியமை சம்பந்தமாக இதுவரை 33 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அத்துடன் தேர்தல் சட்டங்களை மீறி பயன்படுத்திய 09 வாகனங்களையும் பொலிஸார் கைப்பற்றினர்.
சட்டவிரோதமான ஊர்வலங்களை நடத்தியமை, சுவரொட்டிகளை ஒட்டியமை, வீதிகளில் கட்சியின் சின்னங்களை வரைந்தமை போன்ற தேர்தல் சட்டங்களை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
0 Response to "இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 220 கிலோ கஞ்சா பொதிகள் மீட்பு - தேர்தல் சட்டங்களை மீறி 33 பேர் கைது"
Post a Comment