பிரித்தானிய முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸ் சவூதி அரேபி யாவில் நடைபெற்ற 'வாள் நடன விழாவில்' பாரம்பரிய சவூதி ஆடையணிந்து பங்குபற்றினார். ரியாத் நகரில் நேற்று முன்தினம் இவ்விழா நடைபெற்றது. சவூதி அரேபிய அரச குடும்பத்தினருடன் பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸும் இவ்விழாவில் இணைந்துகொண்டார். சவூதி அரேபியாவின் முன்னாள் புலனாய்வு சேவைகள் தலைவரும் பிரதிப் பிரதமராக கடந்த வருடம் மன்னர் அப்துல்லாவினால் நியமிக்கப்பட்டவருமான இளவரசர் முர்கின் பின் அப்துல்அஸீஸ் தலைமையில் இவ்விழா நடைபெற்றது. இளவரசர் சார்ள்ஸ், சவூதி அரேபியா மற்றும் கட்டாருக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Response to "சவூதி வாள் நடன விழாவில் பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் – (படங்கள்)"
Post a Comment