விலைகளை மாற்றி வர்த்தகச் சந்தைக்கு அனுப்புவதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த
1,10,000 காபன் பேனாக்களை பாவனையாளர் அதிகார சபையின் அதிகாரிகள் வத்தளை , ஹெத்தளை பகுதியில் பிரபல பாடசாலை உபகரண உற்பத்தி நிலையமொன்றில் மேற்கொண்ட தேடுதலின் போது கண்டுபிடித்தனர் .
இவற்றின் பெறுமதி 12 இலட்சம் ரூபாவாகும் . பேனை ஒன்றின் விலை 10 ரூபா என்று குறிப்பிட்டிருந்த போதும் , அந்த விலையை 12 ரூபாவாக மாற்றி சந்தைக்கு அனுப்ப தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது . மாணவர்களுக்கு மூன்று மாத காலங்களாக இவை அதிக விலையில் விற்பனை செய்யப்பட்டமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
இவ்வாறு விலையை மாற்றி விற்பது பாவனையாளர் சட்டத்தை மீறும் செயலாகும் . இத்தகைய திடீர் தேடுதல்களை தொடர்ந்தும் மேற்கொள்ளுமாறு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டொ பாவனையாளர் அதிகார சபைத் தலைவருக்கு உத்தரவிட்டுள் ளார் . இவ்வாறு பாவனையாளர்களை ஏமாற்றும் வர்த்தகர்கள் , நிறுவனங்கள் தொடர்பாக தாம் அவதானம் கொண்டு செயற்படுவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார் .
கொழும்பு நிருபர் .
Categories Post
விலைகளை மாற்றி சந்தைக்கு அனுப்ப இருந்த 1,10,000 பேனாக்கள் மீட்பு.
Posted by kesa
on Thursday, February 20, 2014,
Add Comment
Subscribe to:
Post Comments (Atom)

0 Response to "விலைகளை மாற்றி சந்தைக்கு அனுப்ப இருந்த 1,10,000 பேனாக்கள் மீட்பு."
Post a Comment