Latest Updates

Categories Post

யாழில் பெண் ஒருவரால் திருடர்களின் முயற்சி முறியடிப்பு.


மருந்து எடுத்துக் கொண்டு மகனுடன் சென்ற பெண்ணின் கைப்பையை திருடிக் கொண்டு
செல்ல இளைஞர்கள் எடுத்த முயற்சி பெண் சத்தமிட்டமையால் தப்பிய சம்பவம் ஏழாலை மேற்கில் நேற்று முன்தினம் இரவு இடம் பெற்றுள்ளது .

வவுனியாவில் இருந்து வந்து உறவினர்களுடைய வீட்டில் நின்று தனிப்பட்ட வைத்தியம் செய்யும் வைத்தியரிடம் மருந்து எடுத்துக் கொண்டு இரவு 7.30 மணியளவில் உத்தமன் சிலையடி ஒழுங்கையினால் நடந்து சென்றுள்ளார்கள் .

அந்த வேளையில் மோட்டார் சையிக்களில் பின்னால் வந்த இருவர் இருட்டான இடத்தில் வைத்து கையில் இருந்த பணப்பையை பறிக்க முற்பட்ட வேளையில் குறிப்பிட்ட பெண் சத்திமிட்டதைத் தொடர்ந்து திருடர்கள் மோட்டார் சையிக்கிளில் தப்பி ஒடியுள்ளார்கள் .

0 Response to "யாழில் பெண் ஒருவரால் திருடர்களின் முயற்சி முறியடிப்பு."

Post a Comment