Latest Updates

Categories Post

வடமராட்சியில் பாலுமகேந்திராவிற்கு அஞ்சலி!

‘உயில்’ கலை இலக்கிய சங்கத்தின் ஏற்பாட்டில் “பாலுமகேந்திரா : அழியாச்சுடர்”அஞ்சலியும் கருத்துப் பகிர்வும் நிகழ்வு 22.02.2014 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு பருத்தித்துறை வீதி, இமையாணனில் அமைந்துள்ள ஆகாயம் பதிப்பகத்தில் இடம்பெற்றது.

நிகழ்வில் முன்னதாக பாலுமகேந்திராவின் உருவப்படத்திற்கு மலரஞ்சலியும் சுடரேற்றலும் இடம்பெற்றன. இவற்றினை முறையே ஜி.ரி கேதாரநாதன் மற்றும் குப்பிழான் ஐ. சண்முகன் நிகழ்த்தினர். தி. செல்வமனோகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உரைகளை அ. யேசுராசா, சி.விமலன்ஆகியோர் நிகழ்த்தினர். நன்றியுரையை யாத்திரிகன் நிகழ்த்தினார். நிகழ்வில் ‘நம்பிக்கை’ மற்றும் ‘தப்புக்கணக்கு’                      ஆகிய குறும்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. கலந்துரையாடலும் இடம்பெற்றது.


0 Response to "வடமராட்சியில் பாலுமகேந்திராவிற்கு அஞ்சலி!"

Post a Comment