Latest Updates

Categories Post

இன்று சார்க் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாடு ஆரம்பம்.

சார்க் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாடு மாலைத்தீவில் இன்று ஆரம்பமாகியுள்ளது .
இம்மாநாடு எதிர்வரும் 20 ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது .

இலங்கை , இந்தியா , மாலைத்தீவு , ஆப்கானிஸ்தான் , பங்களாதேஷ் , பூட்டான் , நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர் .

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சர் ஜீ . எல் . பிரீஸ் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது .

வலய ஒத்துழைப்பு , உணவுப் பாதுகாப்பு , சூழல் மாற்றும் , கல்வி மற்றும் நிதி விவகாரங்கள் தொடர்பில் சார்க் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ளன .

இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வெளிவிவகார அமைச்சர் ஜீ . எல் பீரிஸ் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது .

யாழ் நிருபர் .

0 Response to "இன்று சார்க் வெளிவிவகார அமைச்சர்களின் மாநாடு ஆரம்பம்."

Post a Comment