பருத்தித்துறைக் கடலில் வெள்ளிக்கிழமை (14) நீராடிக்கொண்டிருந்த சாரையடி தெற்கைச் சேர்ந்த
கோகுலராஜா பிரசாத் (வயது 15) என்பவர் சுழியில் சிக்கி உயிரிழந்ததாக பருத்தித்துறை
பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எ.எ.டபிள்யூ.ஜெ.எஸ்.அபயக்கோன் தெரிவித்தார்.
இவர் தனது 05 நண்பர்களுடன் நீராடிக்கொண்டிருந்தபோதே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றது.
சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தை மீட்ட பொலிஸார், பிரேத பரிசோதனைக்காக சடலத்தை
யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்ததாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த மாணவன் யா/புற்றாளை மகா வித்தியாலயத்தில் தரம் 10 இல் கல்வி பயின்று வருபவர் ஆவார்.
Categories Post
யாழ். பருத்தித்துறைக் கடலில் நீராடியவர் உயிரிழப்பு
Posted by kesa
on Friday, February 14, 2014,
Add Comment
Subscribe to:
Post Comments (Atom)

0 Response to " யாழ். பருத்தித்துறைக் கடலில் நீராடியவர் உயிரிழப்பு "
Post a Comment