Latest Updates

Categories Post

முல்லைத்தீவில் 807 ஏக்கர் விவசாய நிலங்கள் சேவா லங்கா நிறுவனத்தினால் துப்பரவு.

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்குப் பிரதேசத்திலுள்ள 1,000 ஏக்கர் விவசாய
நிலங்களில் 807 ஏக்கர் விவசாய நிலங்கள் துப்பரவாக்கி முடிக்கப்பட்டதுடன் , எஞ்சிய விவசாய நிலங்கள் எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் துப்பரவாக்கப்படுமென சேவா லங்கா நிறுவனத்தின் முல்லைத்தீவு மாவட்ட நிகழ்சித்திட்ட உதவியாளர் எஸ் . சஞ்சீவகுமார் தெரிவித்தார் .

சிறாட்டிக்குளம் , மூப்பன் பகுதியில் கைவிடப்பட்ட 100 ஏக்கர் வயல் நிலங்களை துப்பரவு செய்வதாக பொறுப்பேற்ற சேவாலங்கா நிறுவனம் அதில் 20 ஏக்கர் நிலங்களை துப்பரவு செய்யவில்லையென அப்பகுதி விவசாயிகள் தெரிவித்திருந்தனர் .

இது தொடர்பில் எஸ் . சஞ்சீவகுமாரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார் .

1,000 ஏக்கர் விவசாய நிலங்களிலுள்ள பற்றைகளை வெட்டியும் பாரியளவான குப்பைகளை அகற்றியும் கொடுப்பதாகக் கூறி 2012 ஆம் ஆண்டிலிருந்து இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது . இந்த நிலையில் , 807 ஏக்கர் விவசாய நிலங்கள் கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் துப்பரவாக்கி முடிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார் .

எஞ்சிய விவசாய நிலங்கள் துப்பரவாக்கப்படவுள்ளன . இதன்போது , மேற்படி சிறாட்டிக்குளம் , மூப்பன் பகுதியிலுள்ள 20 ஏக்கர் விவசாய நிலங்களும் துப்பரவு செய்யப்படுமெனவும் அவர் கூறினார் .

0 Response to "முல்லைத்தீவில் 807 ஏக்கர் விவசாய நிலங்கள் சேவா லங்கா நிறுவனத்தினால் துப்பரவு."

Post a Comment