Latest Updates

Categories Post

கொழும்பில் மோனோ ரயில் திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை

கொழும்பு நகரில் வாகன நெரிசலை குறைக்கும் நோக்கில் மோனோ ரயில் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
மோனோ ரயில் திட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பான ஆரம்ப கட்ட ஆய்வுகள் முடிந்துள்ளதுடன் திட்டத்தின் கீழ் மாலபே, தலாஹேன, ரொபர்ட் குணவர்தன மாவத்தை, தேசிய வைத்தியசாலை, யூனியன் பிரதேசம், உலக வர்த்தக மையம், கொழும்பு கோட்டை, கொட்டாஞ்சேனை ஆகிய பிரதேசங்களை இணைக்கும் வகையில் மோனோ ரெயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.
இதனை தவிர கொழும்பு கொள்ளுப்பிட்டியில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலை வரையும் தனியான மோனோ ரயில் திட்டம் செயற்படுத்தப்பட உள்ளது.
இரண்டாம் கட்டமாக கொட்டாஞ்சேனையில் இருந்து களனி வரை இந்த ரயில் சேவை விஸ்தரிக்கப்படவுள்ளது.
சுரங்க ரயில் பாதைகளுக்கு பதிலாக மோனோ ரயில் பாதைகளை நிர்மாணிக்க பல நாடுகள் அக்கறை செலுத்தி வருகின்றன. சுரங்க ரயில் பாதைகளை விட இந்த போக்குவரத்துச் சேவைகள் இலாபம் ஈட்ட கூடியதாக இருப்பதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

0 Response to "கொழும்பில் மோனோ ரயில் திட்டத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை"

Post a Comment