போலி 500 ரூபா நாணயத்தாள்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதானமாக
இருக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோகண வேண்டுகோள் விடுத்துள்ளார் .
X/25 524376 என்ற இலக்கத்தையுடைய 1800 போலி 500 ரூபா நாணயத்தாள்கள் தற்போது புழக்கத்தில் விடப்பட்டுள்ளன . எனவே மேற்படி தொடர் இலக்கத்தை கொண்ட போலி நாணயத்தாள் கிடைக்கப்பெறுமாயின் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது .
பியகம பிரதேசத்தில் இன்று காலை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது 2 இலட்சத்து 65 ஆயிரம் ரூபா பெறுமதியான 530 போலி 500 ரூபா நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டதோடு சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது .
Categories Post
Home » Uncategories » போலி 500 ரூபா நாணயத்தாள்கள் புழக்கத்தில்........ பொதுமக்களை அவதானமாக செயற்படுமாறு பொலிசார் வேண்டுகோள். [படங்கள் இணைப்பு]
போலி 500 ரூபா நாணயத்தாள்கள் புழக்கத்தில்........ பொதுமக்களை அவதானமாக செயற்படுமாறு பொலிசார் வேண்டுகோள். [படங்கள் இணைப்பு]
Posted by kesa
on Saturday, February 22, 2014,
Add Comment
Subscribe to:
Post Comments (Atom)

0 Response to "போலி 500 ரூபா நாணயத்தாள்கள் புழக்கத்தில்........ பொதுமக்களை அவதானமாக செயற்படுமாறு பொலிசார் வேண்டுகோள். [படங்கள் இணைப்பு]"
Post a Comment