Latest Updates

Categories Post

தொலைபேசியில் ஆபாச படக்காட்சிகளை வைத்திருந்தவருக்கு 2500 ரூபா தண்டம்.

கிளிநொச்சி , அக்கராயன்குளம் பகுதியில் தொலைபேசியில் ஆபாச படக்காட்சிகளை
வைத்திருந்தவருக்கு 2500 ரூபா தண்டம் விதித்ததுடன் , அவருடைய கைத்தொலைபேசியிலுள்ள காணொளியை அழித்து தொலைபேசியினை அரசுடைமையாக்குமாறும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ. வகாப்தீன் உத்தரவிட்டார் .

மேற்படி பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் கைத்தொலைபேசியில் ஆபாசப்படக்காட்சிகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் புதன்கிழமை ( 19 ) கைதுசெய்யப்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர் .

குறித்த நபரை புதன்கிழமை ( 19 ) கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்திய போதே நீதிவான் மேற்படி உத்தரவினைப் பிறப்பித்தார் .

0 Response to "தொலைபேசியில் ஆபாச படக்காட்சிகளை வைத்திருந்தவருக்கு 2500 ரூபா தண்டம்."

Post a Comment