Latest Updates

Categories Post

கூட்டமைப்பு உறுப்பினர்கள் பலர் போர்க்குற்றவாளிகள் – பா.அரியநேத்திரன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் பெற்றிருக்கின்ற மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் போர்க்குற்றவாளிகள் தான் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்திருக்கின்றார்.

அவர் தன்னுடைய முகநூலில் இது தொடர்பில் வெளியிட்டுள்ள பதிவில்,
இந்தியப் படையினர் மேற்கொண்ட குற்றச் செயல்கள் தொடர்பில் கருத்து வெளியிடப்போவதில்லை என்று கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிறேமச்சந்திரன் வெளியிட்ட கருத்துத் தொடர்பில் தனது முக நூலில் பதிவினை மேற்கொண்டுள்ள அரியநேத்திரன்,
சுரேஷ் பிறேமச்சந்திரன் நூற்றுக்கணக்கான அப்பாவிகளைக் கொன்றுகுவித்ததாக குறிப்பிட்டுள்ளதுடன், டெலோவின் சார்பில் கூட்டமைப்பில் போட்டியிட்டு வென்ற கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள், ஜெனா, பிரசன்னா மற்றும் ஈபிஆர்எப் சார்பாக கூட்டமைப்பின் ஊடாக போட்டியிட்டு கிழக்கு மாகாணத்தில் வென்ற இரா.துரைரட்ணம் ஆகியோரை குற்றம் சாட்டியுள்ளதுடன், வடக்கு மாகாண சபைத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கூட்டமைப்பின் கூட்டுக்கட்சித்தலைவர்களில் ஒருவரான த.சித்தார்த்தனையும் குற்றம்சாட்டியுள்ளார்.

ஜெனீவாவில் சர்வதேச போர்க்குற்ற விசாரணை நடத்தவேண்டும் என்று அமெரிக்கா உட்பட்ட நாடுகள் அழுத்தம் கொடுத்துவருகின்ற நிலையில், கூட்டமைப்பினர் மீதும் விடுதலைப்புலிகள் மீதும் போர்க்குற்ற விசாரணை நடத்தவேண்டும் அமைச்சர்கள் விமல்வீரவன்ச, டியு.குணசேகர உட்பட்டவர்களும் கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Response to "கூட்டமைப்பு உறுப்பினர்கள் பலர் போர்க்குற்றவாளிகள் – பா.அரியநேத்திரன்!"

Post a Comment