வெள்ளவத்தை, ஹெவ்லொக் வீதியில் ஆயுர்வேத மத்திய நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்ட விபசார விடுதியை சுற்றிவளைத்த பொலிஸார் அங்கு இருந்த நான்கு பெண்கள் மற்றும் முகாமையாளர் ஒருவரையும் கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த சோதனை நடவடிக்கையானது நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட உத்தரவின் அடிப்படையிலேயே மேற்கொள்ளப்பட்டதாகவும் கைது செய்யப்பட்ட பெண்கள் 25 வயதிற்கும் 35 வயதிற்கும் இடைப்பட்ட பாணந்துறை, அலப்பதெனிய, மீகொடை, ரத்மலானை மற்றும் காலி போன்ற பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என்றும் தெரிவித்தனர்.
தற்போது கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தார்.

0 Response to "வெள்ளவத்தையில் ஆயுர்வேத மத்திய நிலையம் என்ற பெயரில் விபசாரவிடுதி: ஐவர் கைது!"
Post a Comment