Latest Updates

Categories Post

இலங்கையில் பேபால் (PayPal) சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது

இணையத்தளம் வழியாக பணத்தை பரிமாற்றம் செய்யும் உலக புகழ்பெற்ற பேபெல் (PayPal)சேவையை ஆரம்பிக்க இலங்கையில் உள்ள வங்கிகளுக்கு விரைவில் அனுமதி வழங்கப்படும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் இருந்து அனுப்பி வைக்கப்படும் பணத்தை பெறுவதற்காக இலங்கையும் பங்காளியாகும் எனவும் அவர் கூறினார்.

தற்பொழுது இந்த பண பரிமாற்றம் மூலம் இலங்கையில் இருந்து மாத்திரம் பணத்தை அனுப்பி வைக்க முடியும்.

குறைந்த செலவில் வெளிநாட்டில் இருந்து பணத்தை அனுப்பி வைக்க இந்த பேபெல் முறை சிறந்தது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

0 Response to "இலங்கையில் பேபால் (PayPal) சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது"

Post a Comment