கவர்ச்சி நடிகைகள்கூட சுயசரிதை எழுதும் காலமாகி விட்டது. அந்த வகையில், கடந்த சில வருடங்களாகவே தன்னைப்பற்றிய சுயசரிதை எழுதிக்கொண்டிருப்பதாக அவ்வப்போது செய்தி வெளியிட்டு வரும் நடிகை சோனா, அதில் தனது வாழ்க்கையில் குறுக்கிட்ட சில விஐபிக்களின் முகத்திரையினையும் கிழித்திருப்பதாக அதிர்ச்சி தகவல்களையும் வெளியிட்டு வருகிறார். இதனால், சோனாவின் சுயசரிதை வெளியானால், பல இருட்டு ரகசியங்கள் வெளிச்சத்துக்கு வரும் என்று சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.
இந்த நிலையில், இன்னொரு கவர்ச்சி நடிகையான ஷகீலாவும் தற்போது தன்னைப்பற்றிய சுயசரிதை எழுதியிருக்கிறார். தமிழ் சினிமாவில் தான் பிரவேசித்த காலம் தொடங்கி மலையாள பட உலகில் கவர்ச்சி அவதாரம் எடுத்தது வரை அந்த சுயசரிதையில் எழுதியிருக்கிறாராம் ஷகீலா. குறிப்பாக, மலையாளத்தில் தான் கவர்ச்சி நடிகை பட்டியலில் டாப் ரேஞ்சில் இருந்தபோது, மம்மூட்டி, மோகன்லால் உள்ளிட்ட கேரளாவிலுள்ள மெகா நடிகர்களின் படங்களுக்கு போட்டியாக தனது படங்களை ரிலீஸ் பண்ணி, அவர்களின் படங்களை மண்ண கவ்வ வைத்த சில சுவராஸ்யமான சம்பவங்களையும் இணைத்திருப்பதோடு, ஷகிலா படம் வருகிறது என்றாலே மலையாளத்தின் முன்னணி நடிகர்களெல்லாம் தங்கள் படங்களை வெளியிட பயந்து நடுங்கிக் கொண்டு கிடந்த சில திரைமறைவு ரகசியங்களையும் அம்பலப்படுத்தியுள்ளாராம் ஷகீலா.
இந்த சுயசரிதையை படமாக்க தற்போது ஒரு படாதிபதி முன்வந்துள்ளாராம். அதனால், ஷகீலா வேடத்தில் நடிக்க முன்னணி நடிகைகளுக்கு வலைவீசி வருகின்றனர். ஆனால், சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை கதையில் உருவான நடிகையின் டைரியில் நடிக்க பல நடிகைகள் போட்டி போட்ட நிலையில், இப்போது ஷகிலா வேடத்தில் நடிக்க வேண்டும் என்றதும் முன்னணி நடிகைகள் தெறித்து ஓடுகிறார்களாம்.
அதையடுத்து, இது கவர்ச்சி படமல்ல, சுயசரிதை. அதனால் சில்க்கின் கதையில் உருவான தி டர்ட்டி பிக்சர்ஸ் படத்தில் நடித்த வித்யாபாலனுக்கு தேசிய விருது கிடைத்தது போன்று இந்த படத்தில் நடிக்கும் நடிகைக்கும விருது கிடைக்க நிறைய வாய்ப்புள்ளது என்று ஆசை வார்த்தை காட்டி சில நடிகைகளிடம் விடாப்பிடியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.
Categories Post
ஷகீலாவின் சுயசரிதையில் நடிக்க மறுத்து தெறித்து ஓடும் நடிகைகள்!
Posted by kesa
on Monday, February 24, 2014,
Add Comment
Subscribe to:
Post Comments (Atom)

0 Response to "ஷகீலாவின் சுயசரிதையில் நடிக்க மறுத்து தெறித்து ஓடும் நடிகைகள்!"
Post a Comment