Latest Updates

Categories Post

ஆவா குழுவுக்கு உணவு கொடுத்த பெண் கைது!

 கொலை கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஆவா குழுவில்
கடந்த காலங்களில் யாழ். மாவட்டத்தில்  இடம்பெற்ற  பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புபட்டிருந்தனர் என்ற சந்தேகத்தின் பேரில்  ஆவா குழுவின்; தலைவர் ஆவா வினோதன் உட்பட  அந்த குழுவைச் சேர்ந்த 13 பேர் கடந்த மாதம் 6 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

இதன்போது ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயக்கொடி,

இந்த ஆவா குழுவைச் சேர்ந்த நபர்களுடன் இளம்பெண்ணொருவரும் தொடர்பு பட்டிருப்பதாகவும் அந்தப்பெண்னை தாம் தேடிவருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் குறித்த பெண் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆவாக் குழுவைச் சேர்ந்தவர்கள் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டபோது, அந்தக் குழுவினைச் சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு பெண்ணொருவர் உணவு கொண்டு வந்து கொடுத்துள்ளார். இதன்போது அவர் குறித்து விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வந்தனர்.

இந்நிலையில் குறிப்பிட்ட பெண் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார், அப்பெண்ணை இன்று  கைதுசெய்ததாக தெரிவித்தனர்.

ஒரு பிள்ளையின் தாயொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆவாக்குழுவினர் யாழ். நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இவர்களில் 8 பேரை நிபந்தனைகளில் அடிப்படையில் கடந்த ஜனவரி 31 ஆம் திகதி யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார்; விடுவித்தார்.

இதேவேளை  கடந்த வியாழக்கிழமை அதவாது 13 ஆம் திகதி  ஆவாக் குழுவின் தலைவரான ஆவா வினோதன் தவிர்ந்த ஏனைய இருவரும் தலா 5 இலட்சம் பெறுமதியான 3 ஆட்பிணையில்; செல்ல அனுமதிக்கப்பட்டனர். அத்துடன் 13 பேரில் மற்ற இருவரும் மல்லாகம் நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இருந்த இளைஞன் ஒருவருக்கு உணவு கொடுத்த 24 வயதுடைய பிறவுண் வீதியினைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை இன்று  கைதுசெய்துள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஸ்ரீநிக சஞ்சீவ ஜெயக்கொடி தெரிவித்தார்.

0 Response to "ஆவா குழுவுக்கு உணவு கொடுத்த பெண் கைது!"

Post a Comment