வெளிநாட்டில் இருந்து வந்த இளம் வயது நபர் ஒருவர் யாழ்ப்பபாணம் போதனா வைத்தியசாலையில்
இனம் தெரியாத காச்சலுடன் அனுமதிக்கப்பட்ட நிலையில் மரணம் அடைந்த சம்பவம் நேற்று காலையில் இடம் பெற்றுள்ளது .
ஏழாலை வடக்கு முனியப்பர் கோவிலடியைச் சேர்ந்த தம்பிராசா செந்தில்குமரன் வயது 33 கனடாவில் இருந்து இரண்டு மாதங்களுக்கு முன்னர் தனது சொந்த இடத்திற்கு மனைவியுடன் வந்து தங்கியிருந்தார் .
இவர் கடந்த வாரம் திடீரென காச்சலினால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் .
இந்நிலையில் இவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில மரணம் அடைந்ததாகவும் இதனைத் தொடர்ந்து சடலம் பிரேதப் பெட்டியில் வைத்து திறக்கவேண்டாம் என்ற அறிவித்தலுடன் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
குறிப்பிட்ட நபர் திருமணம் செய்து ஒரு வருடகாலம் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும் . இவருடைய மரணத்திற்கான உரிய காரணம் தெரிவிக்கப்படவில்லையென உறவினர்கள் தெரிவிக்கின்றார்கள் . உறவினர்களிடையே பல்வேறு சந்தேகங்களும் குறிப்பாக வைத்திய சிகிச்சையில் ஏற்பட்ட தவறினால் மரணம் ஏற்பட்டதாகவும் கூட தெரிவிக்கின்றார்கள் .
Categories Post
Home » Sri lanka news »
Srilanka
» யாழில் வெளிநாட்டில் இருந்து வந்த இளம் நபர் இனம் தெரியாத காய்ச்சலால் மரணம்.
யாழில் வெளிநாட்டில் இருந்து வந்த இளம் நபர் இனம் தெரியாத காய்ச்சலால் மரணம்.
Posted by kesa
on Sunday, February 16, 2014,
Add Comment
Subscribe to:
Post Comments (Atom)

0 Response to "யாழில் வெளிநாட்டில் இருந்து வந்த இளம் நபர் இனம் தெரியாத காய்ச்சலால் மரணம்."
Post a Comment