Latest Updates

Categories Post

திருகோணமலையிலும் எலும்புக்கூடுகள் மீட்பு : விசாரணை ஆரம்பம்



திருகோணமலை நகரசபைக் கட்டடத்திற்கு அருகில் கிணறு வெட்டும் போது  எலும்புக்கூடுகள் சில நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக பொலீஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த எலும்புக்கூடுகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்..

எலும்புக்கூடுகள் மீட்கப்ட்ட பகுதியின் பாதுகாப்பு தற்போது பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் இன்றைய தினமும் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மன்னார் மனிதப்புதை குழியில் இருந்து நேற்று வரை 60 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Response to "திருகோணமலையிலும் எலும்புக்கூடுகள் மீட்பு : விசாரணை ஆரம்பம்"

Post a Comment