Latest Updates

Categories Post

வானிலிருந்து மர்மப் பொருள் வீழ்ந்தால் அதை கையிலெடுக்காது பொலிஸூக்கு அறிவிக்கவும்

 வானிலிருந்து ஏதாவது ஒரு பொருள் வீடுகளுக்கு மேல் அல்லது நிலத்தில் வீழ்ந்தால் அவற்றை கையிலெடுத்து ஆராய்வதை விடுத்து உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு தகவல் வழங்கப்பட வேண்டும் என புவியியல் துறை பேராசிரியரும் பேராதனை பல்கலைக்கழக உபவேந்தருமான அத்துல சேனாரத்தின பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

அண்மையில் ராகலையில் வானிலிருந்து வீடொன்றின் மீது விழுந்ததாகக் கூறப்படும் பொருள் பற்றி ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் போது உபவேந்தர் மேற்கண்டவாறு வேண்டுகோளை விடுத்தார்.

ராகலையில் வீடொன்றின் மீது வானிலிருந்து மர்மப் பொருள் ஒன்று வீழ்ந்ததாகக் கூறப்பட்ட இடத்திற்கு பல்கலைக்கழக புவியியல் துறை ஆய்வாளர் மற்றும் இரு தொழில் நுட்பவியலாளர்களையும் அனுப்பி வைத்தேன்.

அவர்களின் ஆய்வுகளின் படி அங்கு விழுந்த மர்மப் பொருள் எரிகல் பாகமாக இருக்கலாம் என அறிய முடிகின்றது. என்றாலும் எவ்விதமான அறிகுறிகளும் காணப்படவில்லை.

அப்பொருளை எவரேனும் எடுத்துச் சென்றிருக்கலாம் அல்லது அது தாக்கத்தினால் அதிக வெப்பத்தினால் கரைந்திருக்கலாம் என்றாலும் விண்ணில் காணப்படும் எரிகல் துண்டாக இருக்கலாம் என கருத முடியும்.

இனிமேல் வானிலிருந்து ஏதாவது ஒரு பொருள் நிலத்தில் விழுவதை அவதானித்தால் அதனை கையிலெடுத்து விடக்கூடாது. அவற்றில் மக்களுக்கு கெடுதிகளை ஏற்படுத்தக்கூடிய இரசாயனங்கள் இருக்கக்கூடும்.

எனவே அப் பொருள் குறித்து அருகில் அமைந்துள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிப்பதோடு அவ்விடம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்a

0 Response to "வானிலிருந்து மர்மப் பொருள் வீழ்ந்தால் அதை கையிலெடுக்காது பொலிஸூக்கு அறிவிக்கவும் "

Post a Comment