Latest Updates

Categories Post

இந்திய தென்பிராந்திய கட்டளைத் தளபதி யாழ். விஜயம்!

இந்தயாவின் தென்பிராந்தியக் கட்டளைத் தளபதி லெப்.ஜனரல் அசோக்சிங் மற்றும் மனைவி உசாசிங் மேஜா் ஜனரல் டி.ஆா்.சொனி ஆகியோர் இன்று வியாழக்கிழமை (20.02.2014) காலை உத்தியோக பூா்வ விஜயமொன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணம் வந்திருந்தார்.

காலை 10 மணிக்கு யாழ்.பலாலி விமானநிலையத்தினை வந்தடைந்த வர்கள் அங்கு யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜா் ஜனரல் உதயபெரேராவை சந்தித்து யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் யாழ் மாவட்டத்தில் மேற் கொள்ளப்படும் அபிவிருத்தி தொடா்பாகவும் கலந்துரையாடினார்.

தொடா்ந்து 1987 ஆம் ஆண்டு இலங்கை வந்த இந்திய அமைதிப் படையினருக்கும் விடுதலைப் பலிகளுக்கும் ஏற்பட்ட யுத்தத்தின் போது உயிர்பிரிந்த இந்திய அமைதிப்படையின் 33 பேரினது நினைவாக அமைக்கப்பட்ட நினைவுச்சமாதிக்கு இராணுவத்தளபதியினர் மலா்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதை தொடர்ந்து காலை 11 மணியளவில் நல்லூர் கந்தசாமி கோவிலுக்கு சென்று பூஜை வழிபாடுகளையும் மேற்கொண்டார்.

0 Response to " இந்திய தென்பிராந்திய கட்டளைத் தளபதி யாழ். விஜயம்! "

Post a Comment