Latest Updates

Categories Post

வாகரையில் விலங்குகள் உண்ட நிலையில் வயோதிபரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் வைத்து காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்ட வயோதிபரின் சடலமொன்றினை நரிகள் உண்ட நிலையில் தாம் மீட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் நேற்று மாலை கட்டுமுறிவு குளத்தின் காட்டு;ப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அம்பந்தனாவெளி கதிரவெளியைச் சேர்ந்த வைரமுத்து இளையதம்பி வயது (65) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேற்படி நபர் வயல் வேலைக்காக குறித்த பிரதேசத்திற்கு சென்றதாகவும், நீண்ட நாட்கள் ஆகியும் வீடு திரும்பாமையினால் சந்தேகமுற்ற உறவினர்கள் வாகரை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதன்போது பொலிஸார் குறித்த பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் போது 5 நாட்களின் பின்பு சடலம் குளத்தின் காட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இச்சடலத்தின் மீது காயங்கள் காணப்படுவதாகவும் இவை காட்டில் வாழும் ஊன் உண்ணி விலங்குகளினால் ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், பிரேத பரிசேதனையின் பின்பு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று வாகரை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

0 Response to "வாகரையில் விலங்குகள் உண்ட நிலையில் வயோதிபரின் சடலம் மீட்பு"

Post a Comment