Latest Updates

Categories Post

மண்கும்பானில் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்ட தந்தை-

மண்கும்பான் 5ம் வட்டாரத்தைச் சேர்ந்த,இரண்டு பிள்ளைகளின் தந்தையாகிய-சிவலிங்கம் பார்த்தீபன் என்பவர் வெள்ளிக்கிழமை இரவு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.தற்போது சடலம் பிரேதபரிசோதனைக்காக-யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் யாழ்ப்பாணத்தில் தனிப்பட்ட காரணங்களுக்கான-தூக்கில் தொங்கி தமது உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.இறைவனால் படைக்கப்பட்ட பெறுமதிமிக்க தமது உயிர்களை அற்ப காரணங்களுக்காக அழித்துக் கொள்வது- பெரும் வருத்தத்திற்கும் கவலைக்கும் உரியதாகவே புத்திஜீவிகளால் நோக்கப்படுகின்றது.தற்கொலை செய்து கொள்பவர்களிடம் பரிதாபத்திற்குப் பதிலாக ஆத்திரமே கொள்ளமுடிகின்றது என்று மக்கள் தெரிவிக்கின்றனர்.
எமக்குத் தெரிந்து ஒருமாதகாலத்திற்குள்-யாழ்ப்பாணத்தில் 10க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்திருப்பது அவதானிக்க முடிகின்றது.
சில தினங்களுக்கு முன்னர்  மண்கும்பானைச் சேர்ந்த-ஜெயரூபனின் மனைவி திருமதி சிந்துஜா அவர்கள் தற்கொலை செய்து தனது உயிரை அழித்துக் கொண்டது நீங்கள் அறிந்ததே-ஒரு ஆண்குழந்தைக்குத் தாயான இவர் குடும்பத்தகராறு காரணமாகவே-தன் பிஞ்சுக் குழந்தையையும் மறந்து தனது உயிரை மாய்த்துக் கொள்ள எப்படி மனம் வந்தது என்று இவரது உறவினர் ஒருவர் எமது இணையத்திற்கு தெரிவித்திருந்தார்.
இதேபோல் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் 23 வயதுடைய இளைஞர் ஒருவரும் மரத்தில் தூக்குப் போட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டிருந்தார்.
அதிகரித்து வரும் இத்தற்கொலைகளை தடுத்து நிறத்த-சமூக அமைப்புக்களும்-சமூகஆர்வலர்களும்-மனநல மருத்துவர்களும்-விரைந்து முன் வர வேண்டும் என்பதே எமது வேண்டுகோளும் பிரார்த்தனையும் ஆகும்.

0 Response to "மண்கும்பானில் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்ட தந்தை-"

Post a Comment