லண்டன் ஹீத்ரோ சர்வதேச விமான நிலையத்தின் அருகாமையில் உள்ள ஹமன்ஸ் வேர்த் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் இலங்கையைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்களும் உள்ளனர். தடுப்பு முகாமில் உள்ள இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைவடைந்து வருவதற்கு அவர்கள் விடுதலை செய்யப்படுகின்றமை காரணமல்ல அவர்கள் மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்படுகின்றனர் என்ற உண்மை அம்பலமாகியுள்ளது. இது தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஊடகவியலாளர் புனிதசீலன் பிரதீபன் தமிழ் அகதித் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு நாடுகடத்தப்படும் உண்மை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில். கடந்த இரண்டு மாதங்களாக தாம் இது குறித்தான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும். உயிர் ஆபத்தை எதிர் கொண்டு அகதித் தஞ்சம் கோரிய நிலையில் தமது கோரிக்கைகள் முற்றாக நிராகரிக்கப்பட்ட நிலையில் இலங்கைத் தமிழர் நாடுகடத்தப்படும் பட்டியல் நீண்டு கொண்டு வருவதாக குறிப்பிட்ட அவர். இன்றைய தினம் 14.02.2014 அன்று ருபிந்தன் இருதயநாதன் மற்றும் அஹமட் எனப்படும் இருவர் ஹீத்ரோ விமான நிலையம் ஊடாக கட்டார் நாட்டுக்கு சொந்தமான விமானம் ஊடு கட்டார் கொண்டு செல்லப்பட்டு மீண்டும் அங்கிருந்து வேறு விமானம் வாயிலாக பாதுகாப்புடன் நாட்டிற்கு அழைத்துச் செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது நபரான வினோசன் மோகன் எனப்படுபவர் இன்று பிற்பகல் 2.15ற்கு இலங்கைக்கு நாடுகடத்தும் நோக்குடன் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டும் நாடுகடத்தப்படாத நிலையில் விமானநிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் நிலை பரிதாபத்திற்கு உள்ளானதாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈழத் தமிழர்கள் இலங்கையில் தமக்கு போதிய அளவு பாதுகாப்பு இல்லை என சரியான ஆதாரஙகளுடன் நிருபிக்கும் பட்சத்தில் அவர்களை பிரித்தானிய அரசு நாடு கடத்த முடியாது. ஏவ்வாறாயினும் அகதித் தஞ்சம் கோருவோர் அவர்களுக்கு தேவையான அறிவுரையை ஒழுங்கான முறையில் பெறாமையும் அவற்றை முன்னோக்கி நகர்த்தி கொண்டு செல்லாமையுமே இதற்கு பிரதான காரணங்களாகும். இவை நிற்க தடுப்பு முகாமில் உள்ள அகதித் தஞ்சக் கோரிக்கை மறுக்கப்பட்டவர்களுக்கு இலவச சட்டச் சேவை மறுக்கப்படும் பட்சத்தில் சட்டத் தரணிகளுக்கு பெருந்தொகையான பணம் கொடுக்க வேண்டிய துர்பாக்கிய நிலையை எதிர் கொண்டு வருகின்றமையுமே மன வருத்தத்திற்கு உரிய விடயங்களாக உள்ளன.

நிற்க தமிழர்களுக்காக புலம் பெயர் நாடுகளில் குரல் கொடுக்கும் அமைப்புகளும் சட்டத்தரணிகளும் இளையோர்களும் இவ்வேளையில் முன்வர வேண்டும் என அகதித் தஞ்சம் நிராகரிக்கப்பட்டோர் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

0 Response to "லண்டனில் அகதித் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட ஈழத் தமிழர் இரகசியமான முறையில் இன்றும் நாடு கடத்தல்"
Post a Comment