Latest Updates

Categories Post

தமிழகத்தில் இலங்கையர்களுக்கு பூமி பூஜை. புதிய வீடுகள் அமைக்கத் திட்டம்.

தமிழகத்தின் தும்பலஹள்ளி இலங்கை தமிழர்கள் முகாமில் , சேதமான வீடுகளை இடித்து ,
புதிதாக வீடுகள் கட்டும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது .

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகாவுக்கு உட்பட்ட தும்பலஹள்ளி அணை அருகே , கடந்த , 20 ஆண்டுகளுக்கு முன் , இலங்கை தமிழர்களுக்கான , 174 வீடுகளை அரசு கட்டி கொடுத்தது .

பல ஆண்டுகள் ஆனதாலும் , போதிய பராமரிப்பு இல்லாததாலும் , வீடுகள் பலவும் சேதமடைந்து , இடியும் நிலையில் இருந்தது .

இப்பகுதி மக்களின் பல ஆண்டு கோரிக்கைக்கு அடுத்து , கடந்த நான்கு மாதத்துக்கு முன் , 30 வீடுகளை இடித்து , ஒரு லட்சத்து , 20 ஆயிரம் மதிப்பில் புதிய வீடுகள் கட்டித்தர உத்தரவிடப்பட்டு , வீடுகள் இடிக்கப்பட்டன .

நான்கு மாதமாக வீடுகள் இல்லாததால் , அருகருகே இருந்த வீடுகளில் தஞ்சம் புக வேண்டிய நிலைக்கு , இலங்கை தமிழர்கள் தள்ளப்பட்டனர் .

வீடுகள் கட்ட நடவடிக்கையே இல்லாததால் , மக்கள் அதிருப்தியில் இருந்தனர் .

இந்தநிலையில் நேற்று , 150 வீடுகள் கட்டுவதற்கான பூமி பூஜை விழா நடந்தது .

சென்னை நிருபர் .

0 Response to "தமிழகத்தில் இலங்கையர்களுக்கு பூமி பூஜை. புதிய வீடுகள் அமைக்கத் திட்டம்."

Post a Comment