முதலாம் பாகம்
வவுனியா நகரசபையில் நீண்ட காலமாக அமைய ஊழியர்களாக பணியாற்றி வரும் 43 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்ச்சி, கடந்த 03.02.2014 அன்று வவுனியா கலாசார மண்டபத்தில் நடைபெற்றமை நீங்கள் யாவரும் அறிந்ததே.
வவுனியா நகரசபையில் நீண்ட காலமாக அமைய ஊழியர்களாக பணியாற்றி வரும் 43 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்ச்சி, கடந்த 03.02.2014 அன்று வவுனியா கலாசார மண்டபத்தில் நடைபெற்றமை நீங்கள் யாவரும் அறிந்ததே.
அந்த நிகழ்ச்சியில், பலரும் பார்க்க மறந்து போன இன்னோரன்ன பல விசயங்கள்! இதோ.
கால் கடுக்க காத்திருக்க வைத்த முதலமைச்சரும், அமைச்சர்களும்!
குறித்த நிகழ்ச்சி 4.30 மணிக்கு நடைபெறும் என்று அழைப்பு விடுத்தலின் போது அனைவருக்கும் சொல்லப்பட்டிருந்தது. நிகழ்ச்சியின் சிறப்பு அதிதிகளாக கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த வடக்கின் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், வர்த்தக வணிகத்துறை மத்திய அமைச்சர் ரிசாட் பதியூதீன், வடமாகாண சுகாதாரத்துறை அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஆகியோரை “பாண்ட்” வாத்திய இசை அணி வகுப்பு மரியாதையுடன், பிரதான நுழைவாயிலிருந்து மண்டப வாயில் வரை அழைத்து செல்வதென நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்திருந்தனர்.
“பாண்ட்” வாத்திய இசை அணி வகுப்பு மரியாதையை வழங்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த வவுனியா சைவப்பிரகாசா மகாவித்தியாலய மாணவிகள் 3.30 மணிக்கெல்லாம் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு வருகை தந்து விட்டனர்.
மாணவிகள் அணி வகுத்து சிறு “ட்றையல்” பார்த்து விட்டு, பாண்ட் வாத்தியங்கள் சகிதம் “ஸ்மார்ட்டாக” தரித்து நின்றனர். தமது தோள்கள் மற்றும் கைகளை வாத்தியங்களின் சுமைகள் அழுத்த அழுத்த கால் கடுக்க அவர்கள் தரித்து நின்றும் அதிதிகள் வந்து சேர்ந்த பாடில்லை. சலிப்படைந்த அவர்கள் சீர் குலைந்து வீதியின் ஓரங்களுக்கு சென்று வாத்தியங்களின் சுமையை இறக்கி வைக்க தயாரான போது, “இதோ முதலமைச்சர் இன்னும் 5 நிமிசத்தில வந்திடுவார்.” என்று யாரோ உற்சாக குரல் கொடுத்தார்கள். (அது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களாக இருக்கக்கூடும்)
குரல் கேட்டதும், மறுபடியும் மாணவிகள் இசை கருவிகளை தோளில் மாட்டிக்கொண்டு அணி வகுப்புக்கு தயாராகி விட்டனர். 5 நிமிசம் 55 நிமிசங்களாகி விட்டன. அதிதிகள் வந்து சேர்ந்ததாயில்லை. மீண்டும் ஏமாற்றம். மீண்டும் அலைக்கழிப்பு. மீண்டும் மன உளைச்சல்.
சோர்வடைந்து களைந்து போய் பக்கத்திலிருந்த மதில்களில் கால்களை ஊன்றியும், முட்டுக்கொடுத்தும் சாய்ந்தவாறு நம்பிக்கையிழந்து இருந்தனர் மாணவிகள். மீண்டும் அதே குரல். “இந்தா சீ.எம் பக்கத்தில வந்திட்டாராம்.”
இப்படி சொல்லிச்சொல்லியே ஏறத்தாழ இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக ஐந்து அல்லது ஆறு தடவைகள் மாணவிகளை வாட்டி வதக்கி எடுத்து விட்டனர். இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக தம் பிள்ளைகள் சுமையான இசைக்கருவிகளை தாங்கிக்கொண்டு தோள் வலியாலும், கை கால் உளைச்சல்களாலும் அவஸ்தைபட்டுக்கொண்டிருப்பதை பார்த்து பார்த்து அவர்களது பெற்றோர்களும், பொறுப்பான ஆசிரியர்களும் கலவரமடைந்து விட்டனர்.
அதேநேரம் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் ஒன்றரை மணித்தியாலங்களாக அவ்விடத்தில் காத்திருந்தனர்.
5.30 மணிக்கு பின்னர் முதலமைச்சரும், அமைச்சர்கள் இருவரும் வந்திறங்கியதும் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.
கால தாமதமான இரண்டு மணித்தியாலங்களும் நடந்தது என்ன?
வவுனியாவிலுள்ள அமைச்சர் சத்தியலிங்கத்தின் பிரத்தியேக இல்லத்தில் முதலமைச்சரும், ரிசாட்டும், சத்தியலிங்கமும் கூட்டாக இணைந்து சுவாரஸ்யமாக பல விடையங்களை சிரித்து சிரித்து பேசிக்கொண்டு அறுசுவை விருந்துண்டு களித்திருந்தனர். (இதை ஒரு சிலர் மந்திராலோசனை என்று சொல்கிறார்கள். “பால் நிறத்திலும் கள்” இருப்பதை நாம் அநுபவ ரீதியாக உணர்ந்து கொண்டிருப்பதால், வேண்டுமானால் சதியாலோசனை என்று மட்டும் இதை சொல்லி விட்டுப்போகலாம்.)
அதன் பின்னரே, “நேர முகாமைத்துவத்துக்கு முன்மாதிரியாக” மூவரும் நிகழ்ச்சிக்கு சமுகமளித்திருந்தனர்.
முதலமைச்சரை ரிசாட்டும், ரிசாட்டை முதலமைச்சரும், இவர்கள் இருவரையும் புகழ்ந்து அடைக்கலநாதனும் பேசிய பேச்சுகள்!
ரிசாட் பேசும் போது, “இதற்கு முன்னர் பத்திரிகைகளில் உங்களுடைய அறிக்கைகள், உங்கள் பற்றிய செய்திகளை படித்திருக்கிறேன். அரசியலுக்கு வரும் எண்ணம் உங்களுக்கு இருந்ததுண்டா? இது நீங்கள் எதிர்பார்த்த ஒன்றா?” என்று இப்போது தான் அவரை பார்த்து கேட்டேன். (மேடையில் இருவருக்கும் பக்கத்து பக்கத்து ஆசனங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன) அதற்கு அவர், “இல்லை இல்லை, இல்லவே இல்லை. சிறிது கூட எனக்கு விருப்பம் இருந்ததில்லை. அப்படி ஒரு எண்ணம் இருந்ததே இல்லை.” என்று, முதலமைச்சர் விக்னேஸ்வரன் தன்னிடம் கூறியதாக ரிசாட் புகழ்ந்து பேசினார்.
(முதலமைச்சர் வேட்பாளர் தெரிவின் போது, வடக்கு கிழக்கு மற்றும் புலம் பெயர் தமிழ் சமுகம் தன்னை நிராகரிப்பது கண்டு, சுத்தமான யோக்கியனாக இருந்திருந்தால், “சீச்சீ... இந்தப்பழம் புளிக்கும்” எனும் கதையாக விக்னேஸ்வரன் தன் நிலை உணர்ந்து தானாகவே அரசியலிலிருந்து விலகிப்போயிருக்க வேண்டும். அதற்கு அவரது பதவி மோகம் இடம் கொடுக்கவில்லை. கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் மாவையா? விக்னேஸ்வரனா? என்று பெரும் இழுபறி நிலையில் இருந்த போது, தமிழ் தேசியத்தை வலியுறுத்தும் செய்தித்தளங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில், (இணைய மூல வாக்களிப்பு) மாவை 3,000 வாக்குகளை கடந்து குதிரை வேகத்தில் பயணித்துக்கொண்டிருக்கும் போது, வெறும் 700 வாக்குகளைக்கூட எட்டிப்பிடிக்க முடியாமல், நாக்கை தொங்கப்போட்டு இளைத்தவாறு நொண்டிக்கொண்டிருந்த உங்கள் பெருந்தன்மை பற்றி எமக்கு நன்றே தெரியும் விக்னேஸ்வரன்! ஆனால் பாவம், ரிசாட்டுக்கு தெரியாமல் போனது தான் கவலைக்கிடம்.)
பதிலுக்கு “மைக்” பிடித்த வடக்கின் முதலமைச்சர் என்று சொல்லப்படுகின்ற விக்னேஸ்வரன், “தேர்தலை இலக்கு வைத்து செயல்படாமல், அபிவிருத்தி நோக்கி பணியாற்ற வேண்டும். கூடவே தமிழ் முஸ்லிம் உறவையும் கட்டியெழுப்ப வேண்டும்.” என்று தொனிப்பட பேசி அமர்ந்தார்.
அடுத்து மேடையேறிய உண்ணாவிரத புகழ் மன்னிக்கவும், “சிக்கன், மட்டன், புரியாணி, பிறைட்ரைஸ், கொத்து ரொட்டி” புகழ் செல்வம் அடைக்கலநாதன், “இது வரலாற்று முக்கியத்துவம் மிக்க நிகழ்வு. அமைச்சர் (ரிசாட்) எங்களுடன் இருப்பது மிகப்பெரிய விசயம்!” என்று உணர்ச்சி வயப்பட்டு பேசினார்.
தமிழ் பேசும் உலக உறவுகளே!
வட மாகாணசபை ஊடாக, நல்லாட்சி ஒன்றை அமைப்பதற்கு பெரும் தடையாக “பிரதம செயலாளர்” இருப்பதாக முதலமைச்சர் உட்பட மாகாணசபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் புலம்பிக்கொண்டிருக்கின்றனர். வட மாகாணசபையை ஒரு அடி தானும் முன்நோக்கி நகர்த்தி விட முடியாதவாறு, கூட்டமைப்புக்கு வைக்கப்பட்டிருக்கும் “செக்”கே, விஜயலெட்சுமி தான்! அந்த செக்கை வைத்தவரே ரிசாட் தான்!
அத்தோடு முஸ்லிம் இனத்துக்கே பெரும் “டேஞ்ஜர் மேன் ரிசாட்” என்று, அதே இனத்தை சேர்ந்த ரவூப் ஹக்கீம்மே பலமுறை எச்சரிக்கை செய்திருக்கிறார்.
இதற்கும் அப்பால் மன்னார், மாங்குளம், வவுனியா, முல்லைத்தீவு பகுதிகளிலிருந்து முஸ்லிம் மக்களை ஏவி விட்டு, 03.02.2014 அன்று காலை வவுனியா கச்சேரிக்கு முன்பாக கூட்டமைப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வித்து, பதாதைகளை தீயிட்டு எரிக்க வைத்த ரிசாட்டுக்கு, 03.02.2014 அன்று மாலையே விருந்து கொடுத்து புகழ்ந்து பேசிய இவர்களா தமிழ் மக்களின் இராஜதந்திரிகள்?
இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் யார் யாரெல்லாம் இருந்தார்கள்? இதனால் யார் யாரெல்லாம் அக மகிழ்ந்தார்கள்? எதிர்பாருங்கள்...
தமிழ் பேசும் உலக உறவுகளே!
வட மாகாணசபை ஊடாக, நல்லாட்சி ஒன்றை அமைப்பதற்கு பெரும் தடையாக “பிரதம செயலாளர்” இருப்பதாக முதலமைச்சர் உட்பட மாகாணசபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் புலம்பிக்கொண்டிருக்கின்றனர். வட மாகாணசபையை ஒரு அடி தானும் முன்நோக்கி நகர்த்தி விட முடியாதவாறு, கூட்டமைப்புக்கு வைக்கப்பட்டிருக்கும் “செக்”கே, விஜயலெட்சுமி தான்! அந்த செக்கை வைத்தவரே ரிசாட் தான்!
அத்தோடு முஸ்லிம் இனத்துக்கே பெரும் “டேஞ்ஜர் மேன் ரிசாட்” என்று, அதே இனத்தை சேர்ந்த ரவூப் ஹக்கீம்மே பலமுறை எச்சரிக்கை செய்திருக்கிறார்.
இதற்கும் அப்பால் மன்னார், மாங்குளம், வவுனியா, முல்லைத்தீவு பகுதிகளிலிருந்து முஸ்லிம் மக்களை ஏவி விட்டு, 03.02.2014 அன்று காலை வவுனியா கச்சேரிக்கு முன்பாக கூட்டமைப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்வித்து, பதாதைகளை தீயிட்டு எரிக்க வைத்த ரிசாட்டுக்கு, 03.02.2014 அன்று மாலையே விருந்து கொடுத்து புகழ்ந்து பேசிய இவர்களா தமிழ் மக்களின் இராஜதந்திரிகள்?
இந்த ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் யார் யாரெல்லாம் இருந்தார்கள்? இதனால் யார் யாரெல்லாம் அக மகிழ்ந்தார்கள்? எதிர்பாருங்கள்! என்று கடந்த 05.02.2014 அன்று எமது செய்தித்தளத்தில் வெளியாகிய புலனாய்வு அறிக்கையிடலில் குறிப்பிட்டிருந்தோம்.
அதன் இரண்டாம் பாகத்தை தொடர்ந்து வாசியுங்கள்!
வர்த்தக வணிகத்துறை மத்திய அமைச்சர் ரிசாட் பதியூதீனின் தம்பி வடமாகாணசபை உறுப்பினர் ரிப்கான் பதியூதீன், வவுனியா நகரசபை முன்னாள் உறுப்பினர் அப்துல் பாரியை அவசரமாக சந்தித்து, “அண்ணா சொல்லியிருக்கிறார். உடனடியாக கூட்டமைப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை செய்யட்டாம். இத நாங்கள் கட்டாயம் செய்ய வேணும். மக்கள ஒழுங்கு படுத்தட்டாம்.” என்று கூறினார்.
அமைச்சர் ரிசாட் ஆர்ப்பாட்டத்துக்குரிய எல்லா ஒழுங்குகளையும் செய்து கொடுத்து விட்டு, ஆர்ப்பாட்டத்துக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றால்ப்போல் வேசம் போட்டுக்கொண்டிருக்க, அப்துல் பாரி அடங்கலாக முஸ்லிம் பிரதிநிதிகள் குழுவொன்று, இந்தியன் வீட்டுத்திட்டம் 3ம் கட்டத்தில் உள்வாங்கப்பட்டிருப்பதாக பதிவுகளில் காட்டப்பட்டிருக்கும் வவுனியா மாவட்ட தமிழ் கிராமங்களான தரணிக்குளம், மறவன்குளம், சுந்தரபுரம், ஈஸ்வரிபுரம், பகுதிகளுக்கு சென்று,
“ரி.என்.ஏ உங்களுக்கு கிடைக்க இருக்கிற வீட்டையெல்லாம் பறிக்கப்போகுது. பார்த்துக்கொண்டு சும்மா இருக்கப்போறீங்களோ? ஆனா நாங்க உங்கள கைவிடமாட்டம். நீங்க இதுகள் ஒன்றுக்கும் பயப்பிட வேண்டாம். உங்கள் எல்லோருக்கும் அமைச்சர் (ரிசாட்) ஓமந்தையில ஒரு ஏக்கர் காணி தரப்போறார். நாளைக்கு கட்டாயம் வந்திருங்கோ. பஸ் ஒழுங்கெல்லாம் செய்திருக்கு.” என்று கிராமம் கிராமமாக கூறிச்சென்றது.
மறுநாள் காலை அதாவது 03.02.2014 அன்று தமிழ் கிராமங்களுக்கு மட்டும், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ஏழு பேரூந்துகள் (CTB) அனுப்பப்பட் டிருந்தன.
பேரூந்துகளை ரூட்டுக்கு இவ்வளவு என்று பேசி புக் பண்ணினால், அதில் மக்களை அடைந்து ஏற்றிக்கொண்டு வந்தாலென்ன? வராவிட்டாலென்ன? பேசிய தொகையான 35,000 தொடக்கம் 40,000 ரூபா வரையான பணத்தை கொடுக்க வேண்டியது தான்.
எனவே ரிசாட், அனுப்பப்பட்டிருக்கும் பேரூந்துகளில் எத்தினை பேர் ஏறுகிறார்களோ, அத்தினை பேருக்குரிய டிக்கட் காசை மட்டும் தருவதாக பேசி ஏழு பஸ்களையும் ஒழுங்குபடுத்தி கொடுத்திருந்தார்.
(கடந்த 2013ம் வருட பிற்பகுதியிலும் இந்தியன் வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவில் மோசடி இடம்பெற்றுள்ளதாகவும், அமைச்சர் ரிசாட்டின் தலையீட்டால் தமக்கு கிடைக்க வேண்டிய வீடுகளை இழந்துள்ளதாகவும், தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி, பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் கூட்டமைப்பின் ஆதரவுடன் வவுனியா கச்சேரிக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்ததையடுத்து, முஸ்லிம்களும் அமைச்சர் ரிசாட் ஒழுங்கமைப்பில் ஏட்டிக்குப்போட்டியாக ஆர்ப்பாட்டம் செய்திருந்தமையை நீங்கள் யாவரும் அறிந்ததே. அன்றைய ஆர்ப்பாட்டத்துக்கும் “காணி தருகிறோம், வீடு தருகிறோம்” என்று கூறி, தமிழ் மக்களை அழைத்து வந்து ஆர்ப்பாட்டத்தை செய்து விட்டு ஏமாற்றி அனுப்பியிருந்தார் ரிசாட்.)
“சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது.” எனும் கதையாக தமிழ் மக்கள் பட்டுத்தெளிந்திருந்ததால், இம்முறை ஏழு பேரூந்துகளும் வெறுமையாக திரும்ப, மன்னார் மாவட்டத்திலிருந்தும் (ஒரு பேரூந்து), வவுனியாவில் முஸ்லிம்கள் செறிவாக வசிக்கும் பட்டாணிச்சூரிலிருந்தும், மாங்குளம் பகுதியிலிருந்தும், (வடமாகாணசபை தேர்தல் காலத்தில் சத்தியலிங்கத்தை அழைத்து தமது பகுதியில் கூட்டம் போட்டு “எங்கட ஆதரவு உங்களுக்கு தான்.” என்று தெரிவித்து தேர்தல் வேலைகளில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள்) ஒரு தொகை முஸ்லிம்கள் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு முன்னரான நாள்களில் நடந்தது என்ன?
இந்தியன் வீட்டுத்திட்டம் 3ம் கட்ட பயனாளிகள் தெரிவிலும் மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து, வீட்டுத்திட்டத்தில் உள்வாங்கப்படாத பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் 29.01.2014 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதை அறிந்து கொண்ட முஸ்லிம்கள், “என்ன சார் எங்களுக்கு எதிரா போராட்டம் செய்ய போறீங்களாம். எங்கட வீட்ட இல்லாமல் செய்ய போறீங்களா? என்று புலம்பியுள்ளனர்.”
அமைச்சரின் பிரத்தியேக செயலாளரான அவரது தம்பி, “அது நாங்கள் (இலங்கை தமிழரசுகட்சி) செய்யேல்ல. கூட்டமைப்புக்குள்ள இருக்கிற மத்த கட்சிகள் தான் செய்யினம். நீங்க அத கூட்டமைப்பு செய்யிறதா கருத வேண்டாம். அது ஒரு பெரிய பிரச்சினையும் இல்ல.” என்று கூறியிருக்கிறார்.
03.02.2014 அன்று ஏட்டிக்குப்போட்டியாக முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஓரிரு நாள்களுக்கு முன்னர், வவுனியா நகர் முழுவதும் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட ஒரு எம்.பியின் பெயரை சொல்லி அவருக்கு எதிராக தான் இந்த ஆர்ப்பாட்டம் என்று முஸ்லிம்கள் பரவலாக பேசிக்கொண்டு திரிந்ததையும் அவதானிக்க முடிந்தது.
வீட்டுத்திட்டத்தில் உள்வாங்கப்படாமல் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் 29.01.2014 அன்று வவுனியா கச்சேரி முன்பாக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டால், “மாங்குளம் முஸ்லிம்களின் ஆதரவை இழக்க வேண்டிவரும், வீட்டுத்திட்டம் கிடைத்துள்ள ஒரு சிறு தொகை தமிழ் மக்களின் எதிர்ப்பையும் சம்பாதிக்க வேண்டி வருமே.” என்ன பண்ணலாம்? என்று அப்படியும் இப்படியும் கூட்டிக்கழித்து கணக்குப்பார்த்து அமைச்சர் சத்தியலிங்கம் அன்றைய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதை தவிர்த்துக்கொண்டார்.
ஆனால், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுடன் கூடிய அன்றைய ஆர்ப்பாட்டத்தில் வினோ நோகராதலிங்கம் தவிர, கூட்டமைப்பின் ஏனைய வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆனந்தனும் செல்வமும், வவுனியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்களும் தவறாது கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம் முடிவடைவதற்கு சில சொற்ப நிமிசங்களே இருக்கும் நிலையில், அமைச்சர் சத்தியலிங்கத்தின் சார்பில் அவரது தம்பி (பிரத்தியேக செயலாளர்) சும்மா ஒப்புக்காக கலந்து கொண்டு விட்டு (ஊடகங்களுக்கு தலைகாட்டி விட்டு) போயிருந்தார்.
முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உள்குத்தல் பேச்சு!
தமிழ் மக்களின் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஏட்டிக்குப்போட்டியாக முஸ்லிம்கள் எதிர்(ப்பு) ஆர்ப்பாட்டம் நடத்திய 03.02.2014 அன்று மாலை, வவுனியா நகரசபை அமைய ஊழியர்கள் 43 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்ச்சியில் உரையாற்றிய “வடக்கின் முதலமைச்சர் என்று சொல்லப்படுகின்ற” விக்னேஸ்வரனின் உளத்தூய்மை பற்றி தெரியாத ஊடகங்கள் சில அவரது உரைக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தன. பல ஊடகங்கள் அவரது உரையை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை.
“சிலர் அடுத்த தேர்தலை இலக்கு வைத்து செயல்படுவதாக எண்ணத்தோன்றுகிறது. தேர்தலை இலக்கு வைத்து செயல்படாமல், அபிவிருத்தி நோக்கி பணியாற்ற வேண்டும். கூடவே தமிழ் முஸ்லிம் உறவையும் கட்டியெழுப்ப வேண்டும். கூட்டமைப்பின் எல்லா மாகாணசபை உறுப்பினர்களை விடவும், அமைச்சர் ரிசாட்டின் தம்பி ரிப்கான் பதியூதீன், மாகாணசபையில் தனக்கு நல்ல முன்மாதிரியாக விளங்குவதாகவும், தனக்கு நல்ல ஒத்துழைப்பு வழங்குவதாகவும்” விக்னேஸ்வரன் தனது உரையில் புகழ்ந்து பேசியிருந்தார்.
03.02.2014 அன்று ஏட்டிக்குப்போட்டியாக முஸ்லிம்கள் எதிர் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு ஓரிரு நாள்களுக்கு முன்னர், வவுனியா நகர் முழுவதும் கூட்டமைப்பின் எந்த எம்.பியின் பெயரை சொல்லி அவருக்கு எதிராக தான் தமது ஆர்ப்பாட்டம் என்று முஸ்லிம்கள் பரவலாக கூறித்திரிந்தார்களோ, அதே எம்.பியை மனதில் வைத்தே இந்த “உள்குத்தல் உரையை” விக்னேஸ்வரன் ஆற்றியிருந்தார்.
உண்மையில், வீட்டுத்திட்டத்தில் உள்வாங்கப்படாமல் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் 29.01.2014 அன்று நடத்திய ஜுவனோபாய போராட்டத்தை விக்னேஸ்வரன் சிறுதுளி அளவு தானும் விரும்பியிருக்கவில்லை. விருப்பம் கொண்டிருந்தால், இன்றுவரை அவரே தலைமையேற்று வடக்கில் பல ஜனநாயக போராட்டங்களை நடத்தியிருக்க முடியும். மக்களை ஒன்று திரட்டி தொடர் போராட்டங்களின் மூலம் வடக்கில் அரச திணைக்களங்களின் செயல்பாடுகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை முழுதாக முடக்கியிருக்க முடியும். இனியும் அவர் இதை செய்வார் என்று நீங்கள் எதிர்பார்ப்பீர்களேயானால், அதைவிடவும் மடமைத்தனம் வேறு ஒன்று இருக்க முடியாது!
இந்தியன் வீட்டுத்திட்டம் 3ம் கட்ட பயனாளிகள் தெரிவிலும் மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து, வீட்டுத்திட்டத்தில் உள்வாங்கப்படாத பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் 29.01.2014 அன்று காலை வவுனியா கச்சேரிக்கு முன்பாக நடத்திய ஆர்ப்பாட்டத்தின் பின்னர், மாலை 4.00 மணிக்கு நடந்தது என்ன?
எதிர்பார்த்திருங்கள்!
வடபிராந்திய புலனாய்வு ஊடகவியலாளர்,
-கழுகுகண்-

0 Response to "காலையில் கூட்டமைப்புக்கு எதிராக கொடும்பாவி எரித்த ரிசாட்டுக்கு, மாலையில் புகழாரம் சூட்டிய தமிழ் தேசிய கூத்தமைப்பு!"
Post a Comment