Latest Updates

Categories Post

மும்மொழிகளிலும் தேசிய அடையாள அட்டை

ஆட்பதிவு திணைக்களம் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழியிலும் தேசிய அடையாள அட்டைகளை வழங்கவிருப்பதாக ஆட்பதிவு திணைக்கள ஆணையாளர் ஆர்.எம்.எஸ். சரத்குமார தெரிவித்தார்.
தற்போதைய நவீன இயந்திரங்களின் உதவியுடன் அடையாள அட்டைகளை ஒரு மணித்தியாலயத்திற்குள் தங்களால் வெளியிட முடியுமென்றும் அவர் தெரிவித்தார். அடையாள அட்டையில் ஒருவருடைய பெயர் மாத்திரம் பதிவு செய்யப்படுவதுடன் அவர் செய்யும் தொழில் பற்றிய விபரம் சேர்க்கப்பட மாட்டாதென்றும் அவர் தெரிவித்தார்.
ஒருவருக்கு இரண்டு தேசிய அடையாள அட்டைகளை வைத்திருப்பதற்கோ ஒரே இலக்கத்தில் இரண்டு அடையாள அட்டைகள் வழங்கப்படுவதையோ முற்றாக தடை செய்வதற்கான ஒழுங்குகளும் செய்யப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். கைவிரல் அடையாளமும் அடையாள அட்டையில் சேர்த்துக் கொள்ளப்படுவதனால் ஒருவர் எங்காவது குற்றம் புரிந்திருந்தால் அவரை இலகுவில் இனங்காண்பதற்கு உதவியாக இருக்குமென்றும் ஆணையாளர் தெரிவித்தார். இனிமேல் தேசிய அடையாள அட்டை களை தயாரிப்பதற்கு ஒருவரது பிறப்புச் சான்றிதழ், திருமண சான்றிதழ் மற்றும் பிள்ளைகளின் விபரங்கள் போன்றவை சேர்த்துக் கொள்ளப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 Response to "மும்மொழிகளிலும் தேசிய அடையாள அட்டை"

Post a Comment