Latest Updates

Categories Post

'தமிழீழத்தின் காவலர்கள்' சுவரொட்டி வெளியிட்ட இருவர் கைது.



தமிழீழத்தின் காவலர்கள் என்ற பெயரிலான சுவரோட்டிகளை அரசுக்கு எதிராக வெளியிட்டார்கள்
என்ற குற்றச்சாட்டில் பளைப்பகுதியில் இருவர் கைது .

" அன்பான தமிழ் மக்களே இன்றைய காலம் சுதந்திரத்திற்கான போராட்ட பயணத்தில் அகிம்சைப் போராட்டத்திற்கான காலம் : - தமிழீழத்தின் காவலர்கள் " என்றவாறாக குறிப்பிடப்பட்டுள்ள துண்டுபிரசுரங்களே கிளிநொச்சி மற்றும் பளை பகுதிகளில் வீசப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது .

குறித்த துண்டுப்பிரசுரங்கள் அரசுக்கு எதிராக வெளியிடப்பட்டவை எனவும் , இவற்றை அரசுக்கு எதிராக வெளிட்டார்கள் என்ற குற்றத்தின் அடிப்படையில் இருவர் தற்போது பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் .

0 Response to "'தமிழீழத்தின் காவலர்கள்' சுவரொட்டி வெளியிட்ட இருவர் கைது."

Post a Comment