அம்பாறை , திருக்கோவில் குடிநிலப் பிரதேசத்தில் மூன்றரை வயது சிறுவன் ஒருவனின்
அந்தரங்க உறுப்பை கடித்து காயப்படுத்திய 55 வயதுடைய ஒருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜ . என் . றிஸ்வான் புதன்கிழமை ( 26 ) உத்தரவிட்டார் .
இச்சம்பவம் செவ்வாய்க்கிழமை ( 25 ) இடம்பெற்றுள்ளது .
பாலர் பாடசாலைக்குச் சென்று வந்து தனிமையில் இருந்த மேற்படி சிறுவனை அதே பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடையவர் வீட்டுக்குள் அழைத்துச் சென்றுள்ளதுடன் அவனின் அந்தரங்க உறுப்பை கடித்துள்ளார் . இதன்போது அச்சிறுவன் கதறி அழுத சத்தத்தை கேட்டு குறித்த நபர் தலைமறைவாகியுள்ளார் .
இதனையடுத்து மேற்படி சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுன் குறித்த நபரை திருக்கோவில் பொலிஸார் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டதுடன் புதன்கிழமை ( 26 ) பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதவான் ஜ . என் . றிஸ்வான் முன்னிலையில் ஆஜர்படுத்தியுள்ளனர் .
இதன்போது அந்நபரை எதிர்வரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார் . என திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர் .
Categories Post
Home » Sri lanka news »
Srilanka
» மூன்றரை வயது சிறுவனின் அந்தரங்க உறுப்பை கடித்து காயப்படுத்திய ஐம்பத்து ஐந்து வயது நபருக்கு விளக்கமறியல்.
மூன்றரை வயது சிறுவனின் அந்தரங்க உறுப்பை கடித்து காயப்படுத்திய ஐம்பத்து ஐந்து வயது நபருக்கு விளக்கமறியல்.
Posted by kesa
on Thursday, February 27, 2014,
Add Comment
Subscribe to:
Post Comments (Atom)

0 Response to "மூன்றரை வயது சிறுவனின் அந்தரங்க உறுப்பை கடித்து காயப்படுத்திய ஐம்பத்து ஐந்து வயது நபருக்கு விளக்கமறியல்."
Post a Comment