சோழ மகனின் ஈழ மடல்!.....வெறும்பானை வேகாது!....
என்னை தெரிகிறதா?....
சோழ மகன் என்றதும் கங்கை கொண்டான் கடாரம் வென்றான்
சிங்க மறவன் என்றுபுறநாநூற்று புராணம் பாடுவதாக யாரும் என்னை கருதி விடாதீர்கள்.
உங்களை போலவே நானும் ஒருவன். எமது மண்ணில்
இன்னமும் வாழுகின்ற மக்களில் நானும் ஒருவன்.
இன்னமும் சொல்லப்போனால் நான் ஒரு முன்னாள் போராளி என்பதை
வெளிப்டையாகவே உங்களிடம் சொல்லி விடுகின்றேன்.
முன்னாள் போராளி என்றதும் உங்களில் பலருக்கும் ஞாபகம் வருவது
புலிகள் இயக்கம்தான்.
ஆனாலும்ää உண்மை அதுவல்ல. பல்வேறு விடுதலை அமைப்புகள்
களத்தில் ஆயுதம் ஏந்தி போராடிய காட்சிகள் இன்னமும் பலரது
கண்களை விட்டு நீங்கிவிடவில்லை.
அவற்றில் புலிகள் இயக்கமும் ஒன்று என்பதுதான் உண்மை.
எந்த போராட்ட அமைப்பின் முன்னாள் போராளி நான் என்று என்னை
தேடாதீர்கள்.
எதோ ஒரு வகையில் எல்லாமே விடுதலை அமைப்புகள்தான்.
இன்று எல்லோருமே முன்னாள் போராளிகள்தான்.
சரிää... இனி விடயத்திற்கு வருவோம்.
வரட்டு பிடிவாதங்கள் வாழ்க்கைக்கு உதவாது.
எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எந்த விடயத்திலும் சரி
அவசரப்பட்டு செயலாற்றினால் விளைவுகள் விபரீதமே.
எதையும் புத்தி சாதுரியத்துடன் கூர்ந்து கவனித்து
செயலாற்றுவதே நன்மை பிறக்கும் வழி.
தமிழர் அரசியலிலும் இதை கடைப்பிடிக்க வேண்டியது
தமிழ் கட்சி தலைமைகளின் கட்டாய கடமை.
வழமை போல் nஐனீவா திருவிழா கொடியேற
ஆரம்பித்து விட்டது.
உலக வியாபாரிகள் எல்லோரும் nஐனீவாவில்
கடை விரிக்க தயாராகி விட்டார்கள்.
இனியென்னää... கசாப்புக்கடை காரனும் மனித உரிமை
குறித்து பேசுவான்.
கறை படிந்த கைகளே மனித உரிமை மீறல்களை
பந்தி பிரித்து அறிக்கை இடும்.
தமிழ் மக்கள் வானம் பார்த்த பூயைப்போல
nஐனீவாவில் இருந்து உரிமைகள் யாவும்
வெள்ளம் போல் பாய்ந்து வரும் என்று காத்திருப்பர்.
இப்படி ஒரு நம்பிக்கை தமிழ் மக்களின் மனங்களில்
ஆண்டாண்;டு காலமாக ஆழமாக விதைக்கப்பட்டு வருகிறது.
தமிழர் பிரச்சினையை சர்வதேசம் உன்னிப்பாக கவனிக்கிறது...
கூர்ந்து கவனிக்கிறதுää...புகுந்து கவனிக்கிறதுää...அக்கறையோடு
பார்க்கிறதுää....ஆதரவோடு நோக்ககிறது....
எமக்கு நீங்கள் வாக்களித்தால் சர்வதேசத்தின்
கரங்கள் எங்களை நோக்கி நீளும்.
இவைகள் எல்லாம் தேர்தல் காலங்களில் மக்களில்
காதுகளில் விழுந்த வாக்குறுதிகள்.
வாக்குறுதிகளை நிறைவேற்றவே நாங்கள் nஐனீவா போகிறோம்.
இழந்து போன உரிமைகளை nஐனீவாவில் இருந்து
மூட்டை கட்டி நாங்கள் சுமந்து வருவோம்!.....
இப்படி சொல்லிவிட்டுத்தான் தமிழ் கட்சி பிரதிநிதிகளும்
nஐனிவா நோக்கி படையெடுத்திருக்கிறார்கள்.
ஆனாலும் வழமை போல் வெறுங்கையோடுதான் திரும்பி
வருவார்கள் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை.
ஓவ்வொரு நாடுகளும் அவரவர் நலன் சார்ந்துதான்
இலங்கை அரசின் போர்க்குற்றம் குறித்து பேசுவார்கள்.
அவரவர் நலன் சார்ந்து இருப்பினும் அவைகள் யாவும்
இலங்கை அரசுக்கு எதிரான அழுத்தங்களாகவே
இருக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை.
ஆனாலும்ää.. சர்வதேச நாடுகளின் அழுத்தங்கள் மட்டும்
தமிழர்களுக்கு தீர்வை கொண்டு வந்து காலடியில்
கொட்டி படைக்குமா?... இதுவே கேள்வி.
முதலில்ää.. தமிழ் கட்சி தலைமைகள் உள்ளூரில் உழுவதற்கு
தயாராக வேண்டும்.
உள்ளூரில் உழ முடியாத செத்தல் மாடுகள்
nஐனிவா சென்று உழுது விதைக்கப்போவதாக கதை விடுவதை
யார்தான் ஏற்பது?... எப்படித்தான் நம்புவது?...
சரியோää.. தவறோää... உள்ளூரில் அரசுடன் பேசுவதற்கு
தமிழ் கட்சிகள் பச்சைக்கொடி காட்ட வேண்டும்.
எந்த அரசுடன் பேசி தீர்வு காண முடியுமோää
அந்த அரசுடன் கைகலுக்க அவர்கள் துணிய வேண்டும்.
வலி தந்தோரை வரவேற்பதா?... வதை தந்தோருடன்
கைகலுக்குவதா?....
இந்த முரட்டு பிடிவாதங்கள்
நிரந்தர தீர்வுக்கு ஒரு போதும் உதவாது.
ஊள்ளூரில் அரசுடன் கைகுலுக்கிக்கொண்டால் மட்டுமே
nஐனீவா அழுத்தங்கள் எந்த தீர்வையும் தர உதவும்.
நெருப்பு nஐனீவாவில்ää.... அடுப்பும் nஐனீவாவில்ää...
மூட்டிய அடுப்பில் சு10டேறிக்கொண்டிருப்பது வெறும்பானை.
வேக வேண்டிய பருப்பை பானையில் போட வேண்டியது
தமிழ் கட்சி தலைமைகளின் பொறுப்பு.
அரசுடன் பேச துணிந்தால் மட்டுமே இது ஆகும்.
பானையில் பருப்பும் ஏறும்ää... வேகும்.
இல்லை என்றால்ää nஐனிவாவில் அடுப்பேறப்போவது
வெறும் பானையே.
வெறும் பானை வேகாது!
சோழ மகன்!
0 Response to "சோழ மகனின் ஈழ மடல்!....."
Post a Comment