Soho, central London என்ற பகுதியில் பாலியல் தொழில் கொடிகட்டி பறப்பதை அறிந்த காவல்துறையினர் சென்ற டிசம்பர் மாதம் குறிப்பிட்ட இரண்டு பங்களாக்களில் அதிரடியாக ரெய்டு செய்து, பல பெண்களை கைது செய்ததோடு, அந்த இரண்டு பங்களாக்களையும் கைப்பற்றினர். இதுகுறித்த வழக்கு ஒன்றில் நேற்று பரபரப்பான தீர்ப்பு வழங்கப்பட்டது.கடந்த டிசம்பர் 4ஆம் தேதி 200 அதிகாரிகளுடன் Soho, central London பகுதியில் உள்ள பாலியல் தொழில் நடந்து வரும் பங்களாக்களில் புகுந்த போலீஸார், அதிரடி ரெய்டு செய்து பல பாலியல் தொழிலாளி பெண்களை கைது செய்தனர். பணத்திற்காக பல பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டதாக வழக்கு பதிவுச் செய்யப்பட்டது. நீதிமன்ற ஆணை வாங்கி அந்த பகுதியையே போலீஸார் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
இந்த வழக்கு நேற்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, 'நீதிபதி லண்டன் போலீஸார் மீது கடுமையான குற்றச்சாட்டை கூறினர். பாலியல் தொழில் செய்யும் பெண்கள் யாரையும் கட்டாயப்படுத்தியதாக நிரூபிக்கப்படவில்லை. மேலும் இந்தப் பெண்கள் அனைவரும் தங்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேற்றப்பட்டு வருமானமில்லாமல் கடன் சுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர் உள்ளூர் சமூகத்தின் ஆதரவுடனும், வாடிக்கையாளர்களுக்கான காமிரா கண்காணிப்புடனும், பணியாளர் மற்றும் வரவேற்பாளர் போன்றோரையும் கொண்டிருந்த Soho, குடியிருப்பு பெண்களுக்கு பாதுகாப்பான பகுதியாகவே இருந்துள்ளது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக தீர்ப்பு அளித்தார். இந்த தீர்ப்பை பாலியல் தொழிலாளர் பெண்கள் பெருமகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். இந்த தீர்ப்பு காரணமாக லண்டன் போலீஸார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
0 Response to "லண்டன் பாலியல் தொழிலாளர்களுக்கு ஆதரவான கோர்ட் தீர்ப்பு. காவல்துறை அதிர்ச்சி."
Post a Comment