பட்டினிசாவோடு எம் தீவக மக்கள் நித்தம் போராடிய போது அடுத்தவேளை உணவிற்காக வழிதெரியாது திகைத்த போது எம் நிலங்கள் எல்லாம் காய்ந்து வறண்டு கடல்வலைய தடைச் சட்டம் போடப்பட்ட போது உழைப்பென்ற எதுவென்று தெரியது அலைந்த போது இவர்கள் வந்திருக்க வேண்டும். தற்போது வார்த்தை ஜாலங்கள் காட்டும் இவர்கள் எவரும் அன்று மக்களுக்காக ஒருதுளி வியர்வை சிந்தவில்லை.
தீவகத்தில் ஒவ்வொரு குடிசையினையும் தனது வீடு என்று எண்ணி அனைவரையும் அரவணைத்து அன்றிலிருந்து இன்றுவரை மக்களுக்காக உழைத்து வருபவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இவரின் அரவணைப்பில் இன்று விழுது விட்டு விளங்கும் தீவக மண்ணில் கால்பதிக்க அருகதையற்றவர்கள் இன்று தீவக மக்கள் மத்தியில் யாரென்று மக்களுக்கு அடையாளம் தெரியாதவர்கள் மக்களுக்காக நீலிக்கண்ணீர் வடிப்பது வியப்புக்குரிய விடயமாகும்.
எமது தீவக மக்கள் இன்றுவரை தமது அத்தியாவசிய தேவைகளுக்காக அன்றாடம் வியர்வை சிந்தும் நிலையிலேயே உள்ளனர். இவர்களின் வாழ்க்கை முறையினை அறியாத மாவை சேனாதிராசா அவர்கள்
மாவிட்;டபுர மக்களையே திரும்பிப்பார்க்காத மாவை சேனாதிராசா, தீவகத்தில் வந்து நின்று கொண்டு தீர்க்கப்பட்டவைகளை மறுபடியும் திருத்தப் போவது என்பது வேடிக்கைக்குரிய விடயம். பத்துவருடங்களாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு மாவையால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் இன்றுவரை ஒன்றையெனும் நிறைவேற்ற முடிந்ததா. மறுபடியும் மாவையினால் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நம்புவதற்கு தீவக மக்கள் தயாராகவில்லை.
தமிழ் அகராதிகளிலேயே உணர்ச்சி வாக்கியங்களை பொறுக்கிக் எடுத்துக் கொண்டு காணும் மேடையெல்லாம் தானாக ஏறிநின்று வீர முழக்கம் செய்கின்ற கஜதீபன் எங்கள் தோழர் டக்ளஸ் தேவானந்தாவின் வாசல் வழியே ஏறிநின்று தொண்டர் ஆசிரியர் நியமனம் பெற்று நன்றி மறந்த கதை நானறிந்த கதை.
அன்று பசியோடு இருந்த பொழுது ஒருபிடி சோறு தர முன்வராதவர்கள் இன்று பசியாறிய பொழுது பிரியாணி தருவதாக வாக்குக் கொடுக்கிறார்கள்.
இன்றைய தினம் ஊர்காவற்துறை பிரதேசத்தின் பல்வேறு பட்ட கிராமங்களின் இடம் பெற்ற மக்கள் குறைகேள் நிகழ்வில் கலந்து கொண்டு மக்களின் இடர்களை கேட்டறிந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் பருத்தியடைப்பு கிராம மக்களின் மத்தியில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது ஊர்காவற்துறை பிரதேச சபைத் தவிசாளர் ஜெயகாந்தன் உடனிருந்தார்.
0 Response to "தீவக மக்களின் நலன்களில் இதுவரை பங்கெடுக்காத மாவை சேனாதிராசா தீவக மண்ணில் தற்போது துயர் துடைக்கப்போகிறாராம் - ஈ.பி.டி.பி பாராளுமன்ற உறுப்பினர் உதயன்"
Post a Comment